உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் மோதல்!!

Read Time:2 Minute, 23 Second

Nayanthara1உதயநிதி நடிப்பில் ஏப்ரல் 2-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் படம் ‘நண்பேன்டா’. இப்படத்தை ஜெகதீஷ் இயக்கியிருக்கிறார். உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், உதயநிதி இன்று நண்பேன்டா படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது,

தமிழகம் முழுவதும் 400 தியேட்டர்களில் ‘நண்பேன்டா’ ரிலீஸ் ஆகிறது. இரண்டாவது தடவையாக இப்படத்தில் என்னுடன் நயன்தாரா இணைந்துள்ளார். நான் அவருடைய தீவிர ரசிகன். இப்படத்தில் நயன்தாராவுக்கும் எனக்கும் மோதல், காதல் என இரண்டும் கலந்து இருக்கும். இருவரும் சேர்ந்து ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்துள்ளோம்.

எனது படங்களில் சந்தானம் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், இப்படத்தில் சந்தானத்துக்கு அதிகமான காட்சிகள் இருக்காது. பெரும்பாலான காட்சிகளில் நான் தனியாகத்தான் நடித்திருக்கிறேன். இப்படத்திற்கு பிறகு நான் நடிக்கும் படத்தில் சந்தானம் இல்லை. இதனால் எனக்கும் சந்தானத்துக்கும் மோதல் என்று வதந்தி பரவி உள்ளது. இருவரும் எப்போதும்போல் நண்பர்களாகவே பழகி வருகிறோம்.

நான் தொடர்ந்து காமெடி படங்களில் நடிப்பதற்கான காரணம், எனக்கு காமெடி படங்கள்தான் நன்றாக வருகிறது. அதனால், ஆக்ஷன் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை. அதேபோல், அரசியல் படங்களிலும் நடிக்கமாட்டேன். நான் நடித்த படங்கள் 2 வருடங்கள் கழித்து வெளியானலும், என்னுடைய பேனரில் வருடத்தில் ஏதாவது ஒரு படம் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வலியவன் (திரைவிமர்சனம்)!!
Next post அவருடன் நடிக்க ஆசை…!!