மும்பை: விமானத்தின் இறக்கை பகுதியில் உள்ள அவசர கதவு வழியாக குதித்தவர் கைது!!
Read Time:1 Minute, 24 Second
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று சண்டிகர் நகரில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது.
மும்பை விமான நிலையத்தில் தரை இறங்கிய அந்த விமானம் பயணிகளை இறக்கிவிடும் பகுதியை நோக்கி மெல்ல நகர்ந்து வந்து நின்றது. அவ்வேளையில், உள்ளே இருந்த ஒரு பயணி இறக்கை பகுதியில் உள்ள அவசர கதவை திறந்து கொண்டு விமானத்தில் இருந்து கீழே குதித்தார்.
குதித்த வேகத்தில் நேராக பயணிகள் வெளியே போகும் பகுதியை நோக்கி நடந்து சென்ற அவரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரை சேர்ந்த அந்த நபரின் பெயர் ஆகாஷ் ஜெயின்(27) என்பது விசாரணையில் தெரியவந்தது.
கோவா செல்லும் ஆசையில் வீட்டில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணத்துடன் அவர் மும்பை வந்ததாகவும், ஆகாஷ் ஜெயினை காணவில்லை என உள்ளூர் போலீசில் உறவினர்கள் புகார் அளித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
Average Rating