கருவுற்ற தாயின் புகை பழக்கத்தினால் வயிற்றில் இருக்கும் சிசு படும் பாடு: வீடியோ இணைப்பு!!

Read Time:3 Minute, 30 Second

99cc6093-ab41-4e00-87e0-3cbd8f8f5a48_S_secvpfஆண்களிடையே புகை பிடிக்கும் பழக்கம் புற்றுநோயை உண்டாக்குவதுடன் மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தும் என காலகாலமாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இதே புகை பிடிக்கும் பழக்கம் பெண்களுக்கு இருந்தால் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இதை பலர் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர். எனினும், அறிவியலாளர்கள் இந்த கூற்றில் எத்தனை சதவீதம் உண்மை உள்ளது என்பது தொடர்பாக ஆராய்ச்சி செய்ய தவறவில்லை. இவ்வகையில், வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள துர்ஹம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கருத்தரித்த பெண்கள் முதல் சிசுவின் வளர்ச்சி முழுமையடைந்த கர்ப்பிணி பெண்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டனர்.

இதற்காக 20 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் அன்றாடம் சராசரியாக 14 சிகரெட்டை ஊதித்தள்ளும் ரகத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் வயிற்றில் வளரும் கருக்களின் வளர்ச்சியும், அசைவுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. 24, 28, 32 மற்றும் 36-வது வாரங்களில் அந்த பெண்கள் அனைவரும் ‘4D’ அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்களினால் பரிசோதிக்கப்பட்டனர்.

புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத பெண்களின் வயிற்றில் வளரும் கருக்கள், தங்களது தளிர் கைகளால் முகம், தலை போன்ற பாகங்களை தொட்டுப்பார்க்க தொடங்கின. ஆனால், புகை பிடிக்கும் பழக்கத்துக்கு உள்ளாகியிருந்த பெண்களின் கருக்கள் எவ்வித துடிப்பும் இன்றி, வெறும் அசைவோடு நிறுத்திக்கொண்டன. இதை வைத்து பார்க்கையில், புகை பிடிக்கும் பெண்களின் வயிற்றில் வளரும் சிசுக்களின் மத்திய நரம்பு மண்டலம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில் இது தொடர்பான இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக எட்டிவிட முடியாது. இந்த முடிவுகள் புகை பிடிக்கும் பெண்களை பேயாக சித்தரித்து காட்டவோ, அவர்களை அவமானப்படுத்தவோ வெளியிடப்படவில்லை. மாறாக, புகை பிடிக்கும் பழக்கத்தை பெண்கள் விட்டொழிக்க வேண்டும் என்ற கருவியாகவும், பாடமாகவும் இந்த முடிவை அணுக வேண்டும் என ஆய்வுக்குழுவின் தலைவரான நட்ஜா ரீஸ்லேண்ட் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி.யில் கொடூரம்: 75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்!!
Next post சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்து 7 வயது சிறுவன் பரிதாப பலி!!