கஞ்சா விற்பதாக கூறி கிராமத்து பெண்ணை சித்ரவதை செய்யும் போலீசார்!!

Read Time:4 Minute, 14 Second

d80fbd50-5fce-4e32-9482-bcbb97a56256_S_secvpfதிண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகில் உள்ள கொட்டாரபட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பவுன்தாய்(வயது 55). இவர்களுக்கு மாயி(30), சிவா(25) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் மொச்சை, பருத்தி ஆகியவை தோட்டத்தில் பயிர் செய்து விவசாயம் பார்த்து வருகின்றனர். மேலும் பால் வியாபாரமும் செய்து வருகின்றனர்.
நேற்று இரவு வீட்டில் பவுன்தாய் மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த கன்னிவாடி சப்–இன்ஸ்பெக்டர் அவரை தரக்குறைவாக பேசி திட்டியதுடன் அடித்து உதைத்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தார்.

மயக்கம் அடைந்து சுய நினைவு இழந்த நிலையில் பவுன்தாய் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:–

நாங்கள் விவசாய வேலை பார்த்து வருகிறோம். எனது கணவரை கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அழைத்து சென்று விட்டனர். எனது மகன் திருப்பூரில் வேலைபார்த்து வருகிறான். 2–வது மகனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

நாங்கள் கஞ்சா விற்பனை செய்வதாக கன்னிவாடி போலீசார் எங்களை தொடர்ந்து மிரட்டி அச்சுறுத்தி வருகின்றனர். இவர்களுக்கு பயந்தே எனது மகன்கள் வெளியூர் சென்றுவிட்டனர். எனது கணவரையும் ஜெயிலில் அடைத்து விட்டனர்.

வீட்டில் நேற்று இரவு தனியாக இருந்த என்னை சப்–இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி அடித்து உதைத்து ஆபாசமாக பேசி உனது மகனை எங்கே ஒளித்து வைத்துள்ளாய்? என மிரட்டினார். நான், எனது மகன் இங்கே வரவில்லை என்று சொல்லியும் கேட்காமல் வயதான என்னை கொடூரமாக தாக்கியதால் மயக்கம் அடைந்தேன். போலீசாரால் பலமுறை மிரட்டப்பட்டு எனது மகனின் மோட்டார் சைக்கிள்களை பறித்து வைத்து கொண்டனர். போலீசாருக்கு பயந்தே நாங்கள் ஊரை விட்டு மறைந்து வாழ்ந்து வருகிறோம். தற்போது என் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்ய உள்ளோம் என்று தெரிவித்தார்.

ரெட்டியார்சத்திரம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ரத்தக்கறை படிந்த அரிவாள்களுடன் ஒரு வேனில் மர்மகும்பல் நடமாடியது. அந்த பகுதி பொதுமக்கள் அவர்களை போலீசில் பிடித்து கொடுத்தனர். ஆனால் அவர்களை தாலுகா போலீசார் அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு கூட செய்யப்படவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? என்றும் தெரியவில்லை. ஆனால் போலீசார் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவா வும், அப்பாவி பொதுமக்களை மிரட்டி பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளி சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டி வருவதாகவும் காட்டி வருகின்றனர். உண்மையான செய்திகளை வெளியிட்டால் செய்தியாளர்களுக்கே மிரட்டல் வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை என்பதே இல்லாமல் போய் விடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மந்திரி மாணி மகன் மீது செக்ஸ் புகார்: சரிதா நாயர் எழுதியதாக வெளியான பரபரப்பு கடிதம்!!
Next post துபாய் விமான நிலையத்தில் அதிக சுமையுடன் அவதிப்பட்டவர்களுக்கு கோகோ கோலா அளித்த இன்ப அதிர்ச்சி: குளுகுளு வீடியோ!!