துபாய் விமான நிலையத்தில் அதிக சுமையுடன் அவதிப்பட்டவர்களுக்கு கோகோ கோலா அளித்த இன்ப அதிர்ச்சி: குளுகுளு வீடியோ!!

Read Time:2 Minute, 26 Second

889fa702-cf4c-4547-bb53-5bf9c33ab68c_S_secvpf (1)குடும்பத்தாருக்கு ஏதாவது சம்பாதித்து கொண்டுவர வேண்டும் என்ற குறிக்கோளுடன் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களின் மனதில் கலர்கலராக பல்லாயிரம் கற்பனைகள்; எண்ணங்களில் ஏராளமான சிந்தனைகள்…

டீ, காபி குடித்தால் கூட பணம் செலவாகி விடுமே என கவலைப்பட்டு, ஆசைகளையும் தேவைகளையும் குறைத்துக்கொண்டு குருவிகள் சேமிப்பதுப் போல் சிறுகச்சிறுக சேமித்து மாதந்தோறும் தங்களது குடும்பத்தாரின் பசி தீர்க்கவும், கடன்களை அடைக்கவும் தங்கள் உடலை வருத்தி இவர்கள் தியாகம் செய்கின்றனர்.

தங்களது சேமிப்பு பணத்தில் இருந்து அம்மாவுக்கு கம்பளி, அப்பாவுக்கு கண்ணாடி, அண்ணனுக்கு கைக்கடிகாரம், தம்பிக்கு ஜீன்ஸ் பேண்ட், தங்கைக்கு சுடிதார், மனைவிக்கு நெக்லஸ், மகனுக்கு லேப்டாப், மகளுக்கு டேப்லட், நண்பர்களுக்கு சோப்பு, செண்ட், சிகரெட் பாக்கெட் என மாதாமாதம் பார்த்துப்பார்த்து ஏராளமான பொருட்களை வாங்கி பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கின்றனர்.

ஓராண்டுக்கொரு முறையோ, ஈராண்டுக்கொரு முறையோ விடுமுறையில் ஊருக்கு புறப்பட்டு விமான நிலையத்துக்கு வந்தால்.., அங்கே அதிகப்படியான லக்கேஜ் என்ற பெயரில் பார்த்துப்பார்த்து வாங்கியதில் பல பொருட்களை அந்நாட்டு அதிகாரிகளிடம் பறிகொடுத்து விட்டு, தேறியவரை லாபம் என மீதி பொருட்களுடன் வீடுவந்து சேர்ந்து சோகக்கடலில் மூழ்கிப்போகின்றவர்கள் பலருண்டு.

இப்படிப்பட்ட பலரில் சிலருக்கு துபாய் விமான நிலையத்தில் இன்ப அதிர்ச்சி அளித்த கோகோ கோலா செய்த அற்புதத்தை இந்த வீடியோ இணைப்பில் காணலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கஞ்சா விற்பதாக கூறி கிராமத்து பெண்ணை சித்ரவதை செய்யும் போலீசார்!!
Next post பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் ஆசிரியையை கட்டிப்பிடித்து முத்தம்: போலீசார் விசாரணை!!