பகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்ற மரியத்தை மராட்டிய கவர்னர் வரவழைத்து பாராட்டி பரிசளித்தார்!!
பகவத் கீதை போட்டியில் முதல் பரிசை வென்ற முஸ்லிம் மாணவியான மரியம் ஆசிப் சித்திக்கிக்கு மராட்டிய கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது.
மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள ‘இஸ்கான்’ அமைப்பு, ‘கீதா சாம்பியன் லீக்’ (பகவத் கீதை போட்டி) போட்டி நடத்தியது. இதில், 195 பள்ளிகளை சேர்ந்த, 4,617 மாணவர்கள் கலந்து கொண்டனர். பகவத் கீதை போட்டியில் கலந்து கொள்ள, விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, நகரில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களும், இதில் கலந்துகொண்டனர்.
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில், மாணவர்களின் புரிதல் திறன் மற்றும் அறிவுத் திறன் குறித்து சோதிக்கப்பட்டது. இப்போட்டியில், 12 வயதான, மரியம் ஆசிப் சித்திக்கி என்ற முஸ்லிம் மாணவி, முதல் பரிசை தட்டிச்சென்றார்.
இவர், மரியம் மீரா ரோடில் உள்ள, காஸ்மோபாலிட்டன் உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். முஸ்லிம் மதத்தில் பிறந்த மரியம், பைபிள் மற்றும் பகவத் கீதையை படித்துள்ளார்.
‘மனிதநேயம் மற்றும் அடுத்தவர்களுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்ய வேண்டும்’ என்று, எங்களுடைய புனித நூலான குரான் வலியுறுத்துகிறது. ஆனால், சமுதாயத்தில் பெரும்பாலோர், இதை தவறாக எடுத்துக் கொண்டுள்ளது, வருத்தத்தை அளிக்கிறது’ என்று இப்பரிசை பெற்ற பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த மரியம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மரியம் ஆசிப் சித்திக்கிக்கு உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பில் விரைவில் பாராட்டு விழா நடத்த அம்மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தீர்மானித்துள்ளார் என அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்த பாராட்டு விழாவின் மூலம் அனைத்து மதங்களின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்னும் நற்செய்தியை மக்களுக்கு உணர்த்த விரும்புகிறோம் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், மரியம் அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை மராட்டிய மாநில கவர்னரான வித்யாசாகர் ராவ் நேற்று கவர்னர் மாளிகைக்கு அழைத்திருந்தார். அவரது ஊக்கத்தை பாராட்டிய கவர்னர், புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்தியதாக மராட்டிய மாநில ராஜ்பவன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating