8 தீவிரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்த கோவை ராணுவ வீரருக்கு மரியாதை!!

Read Time:4 Minute, 15 Second

72d92460-7480-49d7-b3d6-68cda3eb6a93_S_secvpfகோவை பெரியநாயக்கன் பாளையம் அருகில் உள்ள நாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கிட பெருமாள், மங்குத்தாய் ஆகியோரின் 4–வது மகன் கண்ணாளன் கென்னடி.

இவர் 1984 ஆண்டு நெ.25 மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவத்தில் சேர்ந்து திருவனந்தபுரம் மற்றும் இலங்கை அமைத்திப்படையில் பணியாற்றினார். தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் எல்லை பாதுகாப்பு படைப்பிரிவில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 1993ஆம் ஆண்டு 10க்கும் மேற்பட்ட திவிரவாத கும்பல் வெடிமருந்துகளுடன் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற தகவல் அறிந்து அவர்களை சுட்டுக்கொல்ல புறப்பட்டனர்.

அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்தி அதில் 8 தீவிரவாதிகளை கண்ணாளன் கென்னடி சுட்டு வீழ்த்தினார். இதில் மற்ற தீவிரவாதிகளால் சுடப்பட்டு தலையில் குண்டு காயம் ஏற்பட்டு அங்கேயே வீரமரணம் அடைந்தார். உடனிருந்த மற்ற பாதுகாப்பு படையினரால் 7 தீவிரவாதிகள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். 7 தீவிரவாதிகளை பிடிக்க உதவியாக இருந்ததுடன் 8 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று வீரமரணம் அடைந்த கண்ணாளன் கென்னடிக்கு அவரது வீரச்செயல்களைப் பாரட்டி இந்திய ராணுவத்தின் உயரிய விருதான கீர்த்திசக்ரா விருதை 1994ல் அப்போதைய ஜனாதிபதியால் கென்னடியின் தாயாரிடம் வழங்கிப்பட்டது. கென்னடியின் நினைவாக நாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் மணிமண்டபம் கட்டப்பட்டு அதில் அவரது படங்கள், உடைகள், கேடயங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளது. இவற்றை அப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.

கடந்த 22 வருடமாக குன்னூர் வெலிங்டன் மற்றும் ரேஸ்கோர்ஸ் 110 படைப்பிரிவுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் 50 பேர் நாயக்கன்பாளையத்தில் உள்ள கண்ணாளன் கென்னடியின் நினைவு தினத்தன்று அவரது நினைவிடத்திற்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த வருடம் வந்த எம்.ஆர்.எல் வெலிங்டன் ராணுவமுகாம் கேப்டன் ராபீன், முன்னால் கர்னல்.மார்ட்டின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்ணாளன் கென்னடியின் நினைவு இடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கென்னடியின் வீரச் செயலை போற்றும் விதமாக கீர்த்திச் சக்ரா நாயக் கண்ணாளன் கென்னடியின் வீர வரலாறு எனும் புத்தகத்தை கென்னடியின் தாயார் மங்குத்தாய் வெளியிட ராணுவ கேப்டன் ராபீன் பெற்றுக் கொண்டார். மேலும் நாயக்கன்பாளையம் கிராமத்தில் அவரது வீரத்தை போற்றும் விதமாக ஒரு சாலைக்கு அவரது பெயரை சூட்டி பெருமைப்படுத்தியுள்ளனர் அக்கிராம மக்கள். இதற்கான ஏற்பாடுகளை கென்னடியின் குடும்பத்தினர், கென்னடி கேஸ் ஏஜென்சிஸ் நிறுவனத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடைக்கானலில் சண்டையிட்டு சமாதானம் செய்து கொள்ளும் வினோத விழா!!
Next post ஊட்டியில் மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்!!