மூக்கு இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை: குணப்படுத்த முடியாமல் போராடிவரும் தாய் (வீடியோ இணைப்பு)!!

Read Time:3 Minute, 6 Second

without_nosechild_002அமெரிக்காவில் பெண்மணி ஒருவர், மூக்கு இல்லாமல் பிறந்த தனது குழந்தையை காப்பாற்ற போராடி வருகிறார்.
அமெரிக்காவில் உள்ள அலபாமா(Alabama) நகரில் வசித்து வந்த Brandi McGlathery என்ற பெண்ணிற்கு கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

குழந்தை கருவுற்ற நிலையில் Tracheotomy என்ற நோயால் பாதிக்கப்பட்டதால், குறைமாத காலத்திலேயே குழந்தை பிறந்துவிட்டது.

இதைவிட கொடுமையாக, பிறந்த அந்த ஆண் குழந்தைக்கு மூக்கு என்ற உறுப்பே இல்லை. இதை கண்ட பெற்றோர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

இருப்பினும், ஆண் குழந்தைக்கு Timothy Eli Thompson என்ற பெயரிட்ட பெற்றோர்கள், அதை அன்புடன் வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், பேஸ்புக் பக்கத்தில் தனது மகனின் நிலை குறித்து பதிவுகள் மற்றும் மகனின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

குழந்தையின் உருவம் மற்றும் அதன் கதை குறித்து பலத்த சர்ச்சை எழுந்ததால், பேஸ்புக் அந்த புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கியது.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த தாயார், ‘பேஸ்புக்கில் எண்ணற்ற மோசமான படங்கள் மற்றும் கருத்துக்கள் வெளிவரும்போது, எனது மகனின் படத்தை மட்டும் நீக்கியது ஏன்’ என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையில், குழந்தைக்கு நவீன சிகிச்சை அளித்து சுவாச உறுப்பை ஏற்படுத்த உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சையின்போது குழந்தைக்கு செயற்கையான முறையில் துளைகள் போடப்பட்டு சுவாசிக்க ஏதுவாக சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த சிகிச்சைக்கு தேவையான வருமானம் இல்லாத காரணத்தால், தாயார் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் இணையதளங்கள் மூலமாக நிதி திரட்டி போராடி வருகிறார்.

மகனின் நிலை குறித்து பேசிய தாயார், தன்னுடைய மகனை அரும்பாடுபட்டாவது காப்பாற்றுவேன் என்றும் ஆனால், எதிர்காலத்தில் சிறப்பான முகத்தோற்றம் இல்லாமல் வாழ நேரிடும் என்பதை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கப்பூரில் இருந்து வந்த சென்னைவாசி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மாரடைப்பால் மரணம்!!
Next post அமீர் கானை அழவைத்த மார்கரிதா!!