கடற்படை வ.புலிகள் மோதல்!
நேற்றையதினம் நாகர்கோயில் வெற்றிலைக்கேணி பகுதியில் கடற்படையினருக்கும் வன்னிபுலிகளிற்குமிடையே நடைபெற்ற மோதலில் 17 கடற்படையினரும் 50 வன்னிபுலிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற கடற்படை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்கிச்சென்ற டொரா படகுமீது வன்னிபுலிகள் தாக்குதல் மேற்கொண்டனர் இதன்போது கடற்படை டோரா படகு ஒன்று மூள்கடிக்கப்பட்டுள்ளதுடன். மற்றையது சேதங்களுடன் காப்பாற்றப்பட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து கடற்படையினரும் விமானப்படையினரும் மேற்கொண்ட கூட்டு இராணுவ நடவடிக்கையின்போது தாக்குதலில் ஈடுபட்ட வன்னிபுலிகளின் 07 படகுகள் மீதும் வன்னிபுலிகளின் இலக்குகள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 50க்கு மேற்பட்ட வன்னிபுலிகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றபோதும் இதனை எம்மால் உறுதி செய்ய முடியவில்லை.
Average Rating