புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் கண்டனம்
படையினர் பயணம் செய்த கப்பல் மீது புலிகள் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தமை தொடர்பாக அரசாங்கம் நேற்று அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது விடுமுறையிலிருந்து கடமைக்குத் திரும்பிய ஆயுதமற்ற 710 பாதுகாப்புப் படையினரை ஏற்றிக்கொண்டு பேர்ள்குரூஸ்11 என்ற கப்பல் திருமலையிலிருந்து காங்கேசன்துறைக்கு சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பலில் கண்காணிப்புக்குழு உறுப்பினர் ஒருவரும் இருந்ததுடன் கண்காணிப்புக் குழுவின் கொடியொன்றும் பறக்கவிடப்பட்டிருந்தது.
இந்த பயணிகள் கப்பலுக்கு பாதுகாப்பாக சில விரைந்து தாக்கும் படகுகளும் சென்றன. இந்தப் படகுகளிலும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் ஒருவர் இருந்தார். வெற்றிலைக்கேணிக்கப்பால் 30கடல் மைல் தொலைவில் இந்தக் கப்பல் சென்று கொண்டிருந்த போது புலிகளின் ஆயுதங்கள் தாங்கிய 12 படகுகளும் நான்கு தற்கொலைத் தாக்குதல் படகுகளும் சாலைக் கடற்பிரதேசத்திலிருந்து மிகவிரைவாக பேர்ள்குரூஸ் கப்பலை நோக்கி வருவது அவதானிக்கப்பட்டது. வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட புலிகளின் தற்கொலைப் படகுகள் படையினரின் கப்பலைத் தாக்க முயற்சித்தன. கடற்படையினரின் அதிவேக விரைந்து தாக்கும்படகு 710 உயிர்களைப் பாதுகாப்பதற்காக புலிகளின் படகுகள் மீது தாக்குதல் தொடுத்தன. புலிகளின் படகுகள் நடத்திய நீண்டநேரத் தாக்குதலையடுத்து புலிகளின் தற்கொலைப் படகொன்று கடற்படைப் படகொன்றை அழித்தது. 2அதிகாரிகளும் 15மாலுமிகளும் ஓர்இராணுவ மின்னியந்திர கருவிகளை இயக்கும் ஒருவரும் மூழ்கடிக்கப்பட்டனர். கடற்படையினரின் மற்றைய அதிவேகபடகு திருப்பித் தாக்கியதில் புலிகளின் நான்கு படகுகள் முற்றாக அழிக்கப்பட்டன. புலிகளின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் உதவிக்கு வந்த விமானப்படையினர் புலிகளின் படகொன்றை முற்றாக நிர்மூலமாக்கினர். படையினரின் இந்த துரித நடவடிக்கைகளினால் படையினர் பயணம் செய்த கப்பல் பாதுகாப்பாக காங்கேசன்துறை சென்றடைவதற்கு முடிந்தது. காணாமற்போன படையினரை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன. புலிகளின் இப்படியான தாக்குதல் மீண்டும்; நடைபெறாதிருக்கும் வகையில் இலங்கை விமானப்படை மட்டுப்படுத்தப்பட் தாக்குதலை நடத்தின. ஏற்கனவே இனங்காணப்பட்ட இரணைமடுவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புலிகளின் சட்டவிரோத விமான ஓடுபாதை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
– athirady.com
One thought on “புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் கண்டனம்”
Leave a Reply
You must be logged in to post a comment.
Hello, I can’t understand how to add your blog ( nitharsanam.net ) in my rss reader