நோயாளியின் நெஞ்சுக்கூட்டுக்குள் இருந்த 7 கிலோ கட்டியை போராடி அகற்றிய மருத்துவர்கள்!!

Read Time:2 Minute, 3 Second

35f71194-41a0-49b1-9417-88b02bd62a40_S_secvpfமருத்துவ வரலாற்றில் உடலின் வேறு பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான கட்டிகளை அகற்றுவதே சிரமமானதாக கருதப்படும் நிலையில் ஒரு நோயாளியின் நெஞ்சுக்கூட்டுக்குள் இருந்த 7 கிலோ கட்டியை டெல்லி மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

31 வயதான அந்த நோயாளிக்கு ’மீடியாஸ்டினம்’ எனப்படும் நெஞ்சுக்கூட்டின் நடுப்பகுதியில் இதயத்திற்கு பின்னால் உள்ள முதுகுத்தண்டிலிருந்து வரும் நரம்பு ஒன்றில், நரம்பியல் கோளாறு காரணமாக கட்டி ஒன்று உருவானது. இந்த கட்டி நாளுக்கு நாள் வளர்ந்து அருகிலுள்ள இதயம் நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளின் செயல்திறனை பாதிக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக வளர்ந்தது.

இதற்கு, பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலனில்லாத நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிரமாக பரிசோதித்த மருத்துவர்களுக்கு இது மிகவும் சவாலான அறுவை சிகிச்சையாக இருக்கும் என்று புரிந்தது. காரணம் அறுவை சிகிச்சையில் இந்த கட்டியை அகற்றும் போது அருகிலுள்ள உறுப்புகளில் அது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது.

இதை உணர்ந்து கொண்ட மருத்துவர்கள் தீவிர சோதனைகளுக்கு பின்னர் திட்டமிட்டு துல்லியமாக நடத்திய அறுவை சிகிச்சையினால் அந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்ப வன்முறை சட்டத்தில் கணவன் மீது பொய் வழக்கு: மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம்!!
Next post 5 வயது சிறுமிக்கடுத்து 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மனித மிருகத்திற்கு மரணதண்டனை!!