இளம்பெண்ணை கற்பழித்து, எரித்துக் கொன்ற காதலன் கைது!!

Read Time:1 Minute, 56 Second

08308940-1195-4ba4-b710-f7d52a1239f6_S_secvpfஉத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் வீட்டின் மொட்டை மாடியில் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்த 19 வயது இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்ததுடன் அவரை தீ வைத்து எரித்துக் கொன்ற காதலனை போலீசார் இன்று கைது செய்தனர்.

இங்குள்ள மஹ்முத்பூர் கிராமத்தை சேர்ந்த அந்தப் பெண்ணை அதே பகுதியை சேர்ந்த ஷேர் சிங் என்பவர் சில மாதங்களாக காதலித்து வந்தார். அந்த இளம்பெண்ணுடன் தனிமையில் இருக்க விரும்பிய அவர், அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தார்.

நேற்றிரவு தனது வீட்டின் மேல்தளத்தில் இருக்கும் மொட்டை மாடியில் தனியாக படுத்திருந்த அந்தப் பெண்ணை நெருங்கிய ஷேர் சிங், தனது இச்சையை தீர்த்துக் கொள்ள முனைந்தார். இதற்கு உடன்படாத அந்தப் பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி அவரை முரட்டுத்தனமாக கற்பழித்த ஷேர் சிங், அவரது உடலின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தார்.

உடல் முழுக்க தீப்பற்றி வேதனையில் அலறிய அவர், சம்பவ இடத்திலேயே உடல் கருகி, உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக இன்று காலை உயிரிழந்த அந்த இளம்பெண்ணின் தந்தை அளித்த புகாரையடுத்து விரைந்து சென்ற போலீசர், ஷேர் சிங்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இயற்கை தந்த வரப்பிரசாதமான வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்..!!
Next post வருகிறது தேர்தல் திருவிழா..! -வீரசங்கிலியன் (சிறப்புக் கட்டுரை)!!