நண்பர் வீட்டு வேலைக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரி கைது!!
Read Time:1 Minute, 15 Second
மேற்கு டெல்லியில் நண்பரின் வீட்டில் வேலை செய்யும் இளம்பெண்ணை(23) பாலியல் பலாத்காரம் செய்த துணை சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
பஞ்சாபி பாக் ஸ்டேஷனில் துணை சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஜாவீர் சிங். இவர் கடந்த வியாழக்கிழமை இரவு தனது நண்பரின் வீட்டுக்கு குடிபோதையில் சென்றுள்ளார். அங்கே பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்தவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த பெண் இதுபற்றி ராணி பாக் போலீசாரிடம் புகார் அளித்தார். அவரை பாலியல் பலாத்காரம் செய்தது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது. ஆகவே, ஜாவீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட அவர், பதினான்கு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Average Rating