எச்.ஐ.வி. நோயை பரப்பிய நண்பனின் தாயை கொன்ற இளைஞன்!!
புதுடெல்லியில் நண்பனால் எச்.ஐ.வி. நோய் தொற்றுக்கு ஆளான இளைஞன், பழிவாங்கும் விதமாக நோயை பரப்பிய நண்பனின் தாயை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரைச் சேர்ந்தவர் ஷியாம். பணி நிமித்தமாக டெல்லி வந்த அவர் அனில் என்பவருடன் நெருங்கி பழகி வந்தார். அனிலுக்கு பாலியல் தொழிலாளர்கள் மூலம் எச்.ஐ.வி. நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையி்ல் அனிலும், ஷியாமும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனிடையே சிறுநீரக கோளாறு தொடர்பாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஷியாம் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எச்.ஐ.வி நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷியாம், நோய் பரப்பிய நண்பனை பழிவாங்க திட்டம் தீட்டினார். அதன்படி விஜய் விஹார் பகுதியில் வசித்து வந்த அனிலின் தாயை ஷியாம் கல்லால் அடித்துக் கொலை செய்தார். தலைமறைவான ஷியாமை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் பீகாரில் வைத்து ஷியாமை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். கூடா நட்பு கேடில் முடியும் என்பது இதுதானோ?
Average Rating