பிளேஸ்டேஷனில் விளையாடும் ஆர்வத்தில் தோழிக்கு மயக்க மருந்து கொடுத்த வாலிபர்!!

Read Time:1 Minute, 37 Second

ba7db16b-f9bb-432a-918c-8a2fec3827ef_S_secvpfஜெர்மனியைச் சேர்ந்த ஒரு வாலிபர்(23) தனது நண்பருடன் பிளேஸ்டேஷனில் முழுமூச்சாக விளையாடிக்கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பது என்று பந்தயம் வைத்து விளையாடினர்.

அப்போது வீட்டுக்கு அவரின் பெண் தோழி வந்தார். விளையாட்டில் வெற்றி பெற நினைத்த அவர் தனது தோழிக்கு தேனீரில் நான்கைந்து துளி மயக்க மருந்தை கலந்து கொடுத்துவிட்டு திரும்ப விளையாட போய்விட்டார்.

அந்த பெண் அடுத்த நாள் மதியம்வரை தூங்கிக்கொண்டே இருந்தார். மயக்க மருந்தின் விளைவாக அவர் வேலைக்கு சென்றும் தூங்கி வழிந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த பெண் அவர் மீது புகார் அளித்தார்.

போலீசார் அவரை விசாரித்தபோது வாலிபர் தானும் அந்த நேரத்தில் போதையில் இருந்ததாக வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து, உடல்நலத்துக்கு எந்த தீங்கும் விளைவிக்கவில்லை என்றாலும், நீதிமன்றம் அவருக்கு 500 யூரோக்கள், அதாவது இந்திய மதிப்பில் 35,350 ரூபாய் அபராதமாக விதித்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தில் விரைவில் வாட்ஸ் அப்பிற்கு தடை?
Next post கடலுக்கடியில் பதுங்கியிருக்கும் பயங்கர வெப்பம்; அச்சத்தில் விஞ்ஞானிகள்..!!!