தேர்தலில் போட்டியிடாதிருக்க சோமவங்ச தீர்மானம்!!

Read Time:1 Minute, 26 Second

258014165Untitled-1எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதிருக்க மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க தீர்மானித்துள்ளார்.

அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகிய சோமவங்ச உள்ளிட்ட குழுவினர் ஜனதா சேவக பக்‌ஷ என்ற கட்சியினை ஆரம்பித்தனர்.

இதேவேளை இவர்கள் மேலும் சில கட்சிகளுடன் இணைந்து பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு ஒன்றை அமைக்க தயாராக இருந்தனர்.

இதில் இணையவிருந்த சில கட்சிகள் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைக்கத் தீர்மானித்துள்ளமையால், இம்முறை தேர்தலில் களமிறங்காதிருக்க சோமவங்ச அமரசிங்க உள்ளிட்ட குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் தேர்தல் காலங்களில் சுயாதீனமாக செயற்பட்டு தனது கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக சோமவங்ச அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தேடப்பட்டு வந்த மூவர் பாகிஸ்தானில் கைது!!
Next post ராஜித்த, அர்ஜூன போட்டியிடவுள்ள இடங்கள் இதோ!!