மாலைக்கண் பாதிப்­புக்கு தீர்வு தரும் மாம்­பழம்..!!!

Read Time:3 Minute, 25 Second

timthumb (4)முக்­க­னி­களில் முதன்­மை­யா­னது மாம்­பழம். எல்­லோ­ருக்கும் பிடித்த மாம்­பழம் சூடா­னது, அதி­க­மாக சாப்­பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்­பார்கள். இதனை மருத்­துவ விஞ்­ஞானம் ஏற்­க­வில்லை. 100கிராம் மாம்­ப­ழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை விட்­டமின் ஏயும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை விட்­ட­மின்­ சியும் உள்­ளது.

தினமும் ஒரு மாம்­பழம் சாப்­பிட்டால் இந்த இரண்டு விட்­ட­மின்­களும் எளி­தாக நமது உடலை வந்­த­டையும். பெரும்­பா­லானவர்கள் மாம்­ப­ழத்தை முழு­து­மாக சாப்­பி­டாமல் தோல் பகு­தியை தூர எறிந்து விடு­வார்கள்.

மாம்­ப­ழத்தின் மேல்தோல் ­ப­கு­தியில் தான் விட்­டமின் சி சத்து அதி­க­மாக உள்­ளது. எமது உட­லுக்கு அதிக முக்­கிய தேவை­யான கல்­சியம், பொஸ்­பரஸ், சோடி யம், பொட்­டா­சியம் ஆகி­ய­வைகள் நாம் சுவை­யாக சாப்­பி­டு­கின்ற மாம்­ப­ழத்தில் அதி­க­மாக கிடைக்கின்றது.

வெண்­ணெயில் அள­வுக்கு அதி­க­மான விட்­டமின் ஏ இருப்­பதை நாம் அறிவோம். இதே­போன்றே மாம்­ப­ழத்­திலும் அள­வுக்கு அதி­க­மான விட்­டமின் ஏ இருப்­பதால் விலை கூடு­த­லான வெண்­ணெயை உண்­பதை விட விலை மலி­வான மாம்­ப­ழத்தை உண்­ணலாம் என்­கின்­றனர் மருத்­து­வர்கள்.

நாம் சாப்­பி­டாமல் தூக்கி எறியும் மாங்­கொட்­டை­யிலும் கல்­சி­ய­சத்தும், கொழுப்­பு­சத்தும் இருக்­கின்­றது.தினமும் மாம்­பழம் உண்­பதன் மூலம் மாலைக்கண் கோளா­றுகள், நரம்­புத்­தளர்ச்சி, பல் குறித்த நோய்கள், மேனியில் சுருக்­கங்கள் நீங்க வாய்ப்புள்­ளது. இரத்த விருத்தி உண்­டாகும். கனி­யாத பழங்­களை சாப்­பிட்டால் கண் கோளாறு, மலச்­சிக்கல் ஏற்­பட வாய்ப்புள்­ளது. பழுத்த பழமே சாப்­பிட வேண்டும். உடல் உஷ்ணம் உள்­ள­வர்கள் அதிகம் மாம்­பழம் சாப்­பி­டு­வதை தவிர்க்க வேண்டும்.

ஒரு சராசரி மனிதனுக்கு தின­சரி 5 ஆயிரம் யுனிட் விட்­டமின் தேவை. மாம்­பழம் அத்­தே­வையை நிறைவு செய்­கி ­றது. இரு­தயம் வலிமை பெறும். பசியைத் தூண்­டும், தோல் நிறத்தில் பொலிவு உண்­டாகும். கல்­லீரல் குறை­பா­டுகள் விலகும்.

புது இரத்த அணுக்கள் உற்பத்தியாகும். உடல் வளர்ச்சி பெறும். இயற்கையான முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் உடலுக்கு கெடுதலை உண்டாக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடுக்கி அருகே தனியார் மருத்துவமனையில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தை!!
Next post கொழும்பில் மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி!!