போஸ்டர் ஒட்டிய இருவரை கடத்திய அறுவர் கைது!!
Read Time:1 Minute, 17 Second
மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சாகல ரத்நாயக்கவின் ஆதரவாளர்கள் இருவர் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த வேளை முச்சக்கர வண்டியுடன் சேர்த்து கடத்தில் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் கெப் வாகனத்தில் வந்தவர்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடத்தல் காரர்களிடம் இருந்து ஒருவழியாக தப்பிச் சென்ற ஒருவர் அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பின் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் கடத்தப்பட்ட நபரை மீட்டதுடன் கெப் வாகனத்தில் பயணித்த ஆறு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
Average Rating