கருப்பு ரிப்பனால் கலாமுக்கு அஞ்சலி செலுத்திய கூகுள்!!
Read Time:1 Minute, 6 Second
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதல் தமிழ் நாட்டின் மூலை முடுக்கில் உள்ள பொதுமக்கள் வரை பலரும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பாரத ரத்னா. டாக்டர். ஏ.பி.ஜெ அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், டெக் உலகின் ஜாம்பவானான கூகுள், தனது தேடல் வார்த்தைகளை தட்டச்சு செய்யும் நீள்சதுரப் பெட்டிக்குக் கீழே கருப்பு ரிப்பன் கொண்ட ஒரு புகைப்படத்தை வைத்து கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.
அந்த புகைப்படத்திற்கு அருகே கம்ப்யூட்டர் மவுசைக் கொண்டு சென்றால் அப்துல் கலாம் அவர்களின் நினைவாக (In memory of Dr APJ Abdul Kalam) என்ற வார்த்தைகள் திரையில் தோன்றும் வண்ணம் தனது அஞ்சலியை கூகுள் வடிவமைத்துள்ளது.
Average Rating