போயா தினத்தில் விகாரையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 04 பேர் கைது!!
எஸல போயா தினமான இன்று விகாரையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பிரித் புத்தகங்களுடன் சேர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் நியோமல் பெரேராவின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட அட்டைகளை விநியோகித்த 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவகத்தேகம, ரம்பக்கனயாகம பிரதேசத்தில் உள்ள அபினவாராம விகாரையில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நியோமல் பெரேராவின் இணைப்புச் செயலாளரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் வருகை தந்திருந்த வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆனமடுவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் திஸாநாயக்கவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நவகத்தேகம பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 80 பிரித் புத்தகங்கள், நியோமல் பெரேராவின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட அட்டைகளை மற்றும் போஸ்டர்கள் 356, டீ சேர்ட்கள் 10 மற்றும் தலைக்கவசங்கள் 08 உட்பட மேலும் சில பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Average Rating