ஆதரவாளர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கின்றேன் – ரவி கருணாநாயக்க!!
கறுப்பு நிற ஹைப்ரிட் ரக காரில் வந்தவரடகளே தமது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேறட்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் செயற்பட்டுக்ெகாண்டிருக்கின்ற நிலையில் இவ்வாறானதொாரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை தான் வன்மையாக கண்டிப்பதாக ரவி கருணாநாயக்க அததெரணவிடம் தெரிவித்தார்.
இன்று காலை கொழும்பு ப்ளூமணெ்டல் வீதியில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு ஹைப்ரிட் ரக காரில் வந்த சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் சாயிக் சித்தி நஸீமா என்ற மாதம்பிட்டிய பகுதியல் வசிக்கக்கூடிய 42 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
மேலும் மூவர் அதி தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 11.45 மணியளவில் இந்த சம்பம் இடம்பெற்றுள்ளது.
Average Rating