கையடக்க தொலைபேசியை கொடுக்க மறுத்த இளைஞருக்கு கத்திகுத்து
கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு கையடக்க தொலைபேசியை பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜிந்துப்பிட்டியை சேர்ந்த எம்.தீபத் என்ற இளைஞரே இவ்வாறு கத்திக்குத்துக்கு உள்ளானவராவார். இச்சம்பவமானது குறித்த நபர் தொலைபேசியில் கதைத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கையில் இவரை பின் தொடர்ந்து வந்தவர்கள் தொலைபேசியை கேட்டுள்ளனர் எனவும் அதை கொடுக்க மறுத்ததால் அவரை கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியை பறித்து சென்றனர் என்றும் அவரது உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.