பிரேசில் நாட்டில் ஜிகா வைரஸ் நோய்க்கு 91 ஆயிரம் பேர் பாதிப்பு…!!
பிரேசில் நாட்டில் ஜிகா வைரஸ் நோய் இன்னும் கடுமையாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 91,387 பேர் ஜிகா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது
பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் ஜிகா வைரஸ் நோய் கடுமையாக பரவியது. இந்த நோய் கருவில் வளரும் குழந்தைகளை தாக்குகிறது.
இதனால் பிறக்கும் குழந்தைகள் மூளை பாதிக்கப்படுகிறது. எனவே சிறிய தலையுடன் பிறக்கின்றன. இது ஜிகா வைரஸ் கிருமிகளை பரப்பும் கொசுக்களால் உண்டாகிறது.
பிரேசில் நாட்டில் ஜிகா வைரஸ் நோய் இன்னும் கடுமையாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 91,387 பேர் ஜிகா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30,286 பேரை வட கிழக்கு பகுதியில் தாக்கி யுள்ளது.
இத் தகவலை பிரேசில் சுகாதாரத்துறை அறிவித் துள்ளது. மேலும் இந் நோய் தாக்கி 3 பேர் உயிரி ழந் துள்ளனர். ஜிகா நோய் உடலில் பல ஆண்டு களாக மறைந்து இருப்பதாக வும் ‘செக்ஸ்’ மூலம் பரவுவ தாகவும் கண்டறியப் பட்டுள்ளது.
இந்த நோயை கட்டுப் படுத்த மருந்து மற்றும் சிகிச்சை முறைகள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.
Average Rating