இராணுவத்தளபதி கடமைக்கு திரும்பவுள்ளார்-

Read Time:1 Minute, 22 Second

sarath_fonseka1.jpgஇராணுவத்தளபதி கடமைக்கு திரும்பவுள்ளார்- கொழும்பு கொம்பனிவீதியில் இராணுவத் தலைமையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் படுகாயமடைந்த இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, தான் 90விகிதம் குணமடைந்து விட்டதாகவும் விரைவில் தனது கடமையை தொடரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தான் குணமடைய உதவிய அனைவரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்த இராணுவத் தளபதி, தான் குணமடைய வேண்டுமென பூஜைகளை நடத்திய அனைத்து இன மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார். அதேவேளை இரக்கமற்ற அழிவை ஏற்படுத்தும் தாக்குதலை மேற்கொண்டோருக்கு எதிராக எனது பணி தொடருமென்றும், எதிர்காலத்திலும் எனது கடமையையும், பொறுப்புக்களையும் சிறந்த முறையில் மேற்கொண்டு நாட்டை பாதுகாப்பேன் என்றும் அவர் நேற்று உறுதியளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊத்தைச் சேதுவின் லண்டன் முகவராக வாசுதேவன்!
Next post பொலீசாரை விடுவிக்கும் நோக்கமில்லை