உங்க கண்கள் இப்படி இருக்கா? அப்ப இந்த பிரச்சனையாக இருக்கலாம்: உஷார்…!!

Read Time:3 Minute, 15 Second

downloadஆஹா! இது பார்க்கவே எவ்வளவு அழகா இருக்கு. இந்த வாக்கியம் பலர் சொல்ல கேட்டிருப்போம். இதை சொல்ல வைப்பது “கண்கள்”. இந்த உலகை பார்க்க கண்கள் தான் நமக்கு உதவுகிறது.

கண்களை வைத்தே ஒருவரது ஆரோக்கியத்தை கூட கணிக்க முடியும்!.

கண்களில் நிரந்தர கட்டி இருந்தால்

சிலருக்கு கண்களுக்கு கீழே கட்டி இருக்கும். அது சில நாட்களில் சரியாகிவிடும். அது பிரச்சனையல்ல! நிரந்தரமாக ஒருவருக்கு கட்டி இருந்தால் Sebaceous Gland Carcinoma என்னும் தோல் நோய் சம்மந்தமான அறிகுறி ஆகும்.

கண் இமை உதிர்ந்தால்

வயது முதிர்வு, மன அழுத்தம், ஊட்டசத்து குறைபாடு போன்ற பல காரணம் கண் இமை உதிர்தலுக்கு இருக்கலாம். ஆனால் இன்னொரு முக்கிய காரணம் தைராய்டு சுரப்பிக் குறைபாடாகும்! உடனே மருத்துவரை அணுகி தைராய்டு சம்மந்தமான அலோசனைகள் பெறுவது நல்லது.

மங்கலான பார்வை

இந்த பிரச்சனை தற்போது எல்லா வயதினருக்கும் வருகிறது. கணினி, செல்போன் போன்ற சாதனங்களை தொடர்ந்து பார்த்தால் கண் எரிச்சல், மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகள் வரும். இதற்கு உடனே மருத்துவரை அணுகுவது நலம். இல்லையென்றால் வேறு பிரச்சனைகள் வரலாம்.

இள மஞ்சள் நிற கண்கள்

கண்களின் நிறம் மஞ்சளாக இருந்தால் அது மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாகும். அதுமட்டுமின்றி பித்தப்பை நாளங்களில் எதாவது பிரச்சனை இருந்தால் கூட கண்கள் நிறம் மஞ்சளாக இருக்கும்.

ஒரு விடயம் மேகமூட்டமாக தெரிந்தால்

இந்த அறிகுறி நீரிழிவு நோயளிகளுக்கு தான் முக்கியமாக தோன்றும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் மருத்துவ பரிசோதனை குறிப்பிட்ட கால அளவில் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் இது கண்களின் ரெட்டினா (retina) வை பாதிக்கும்.

பார்வை குறைதல்

பார்வை குறைபாடோ அல்லது ஒன்றுமே தெரியாமல் போனாலோ தாமதிக்காமல் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். காரணம் இது பக்கவாதம் வருவதற்கான முக்கிய அறிகுறியாகும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திசையன்விளை அருகே தாய்-மகள் தற்கொலை: காதல் கணவரிடம் விசாரணை..!!
Next post மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…!!