யாழில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

Read Time:1 Minute, 9 Second

jaffana-map.gif
யாழ். மல்லாகம் சந்தியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கழுத்து, கை மற்றும் கால் பகுதிகளில் வெட்டப்பட்ட நிலையில் மல்லாகம் சந்தியில் தேவாலயம் பின்புறம் இந்த சடலம் காணப்பட்டது.

வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட சடலம் சிவஞானம் சஞ்சீவன் (வயது 25) என அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மருத்துவமனையில் இச்சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வில்வராசா ரவேசன்(வயது24) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

சுன்னாகம் கந்தரோடை பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்துள்ளது. படுகாயமடைந்த அவர் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எனது வருகையால் முன்னேற்றம் ஏற்படாது: எரிக் சொல்ஹெய்ம்
Next post கிளைமோர் தாக்குதலில் மூவர் பலி மூவர் படுகாயம்