புலிகளின் பிரதேசத்துக்கு மேலாக சிறிலங்கா உளவு விமானம்??

அம்பாறையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு மேலாக சிறிலங்கா விமானப்படையின் உளவு விமானம் பறந்து வேவு பார்த்துச் சென்றுள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிடம் புலிகள் முறைப்பாடு செய்துள்ளனர். (more…)

தமிழர் கொழும்பு மாநகர முதல்வராகிறார்

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பு சுயேட்சைக்குழு கைப்பற்றியது தெரிந்ததே. (more…)

கண்ணிவெடி விபத்தில்….

கண்ணிவெடி விபத்தில் ஹலோ ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவன ஊழியர் படுகாயம் யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கில் கண்ணி வெடி அகற்றும் பணியை செய்துவந்த ஹலோ ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் சுளிபுரத்தை சேர்ந்த...

புலிகளின் பதிலில் உத்தரவாதமாக கருத முடியாது – கண்காணிப்புக்குழு

கடல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அரசாங்கத்திடமும், புலிகளிடமும் உத்தரவாதம் கோரியிருந்த போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுக்கு புலிகள் கடிதம் அனுப்பியிருந்ததாக தெரிவித்துள்ளனர். (more…)

கிளைமோர் தாக்குதலில் மூவர் பலி மூவர் படுகாயம்

வவுனியா ஈச்சங்குளம் வீதியிலுள்ள மரைக்காறம்பளை பகுதியில் இன்றுகாலை 9.30மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு படையினரும், ஒரு பொலீசாரும் பலியாகியுள்ளதுடன், இரு படைவீரர்களும், ஒரு பொலீசாரும் காயமடைந்துள்ளனர். (more…)

எனது வருகையால் முன்னேற்றம் ஏற்படாது: எரிக் சொல்ஹெய்ம்

இலங்கைக்கான தனது வருகையால் தற்போதைய நிலைமைகளில் முன்னேற்றம் ஏதும் ஏற்படக் கூடிய சாத்தியமில்லை என்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை அமைதித் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு கிழக்கு மக்களை பிரபாகரன் கும்பலின் கொடூரப்பிடியிலிருந்து மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் -‘ரிஎம்விபி”யின் இராணுவத்தளபதி மார்க்கன்

வன்னிப்புலிகளிடமிருந்த போது ஆண்டான்குள (வாகரை) பிரதேச இராணுவப் பொறுப்பாளராக இருந்து தற்போது கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) இராணுவத்தளபதியாக இருக்கும் மார்க்கன் எனும் ஐ..மார்க்கன் அவர்கள் முதன்முறையாக ஊடகத்திற்கு அதிலும் நிதர்சனம்.நெற் இணைத்தளத்திற்காக...