புலிகளின் பிரதேசத்துக்கு மேலாக சிறிலங்கா உளவு விமானம்??

Read Time:1 Minute, 35 Second

Ampara.jpghelihapter.jpg

அம்பாறையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு மேலாக சிறிலங்கா விமானப்படையின் உளவு விமானம் பறந்து வேவு பார்த்துச் சென்றுள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிடம் புலிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அம்பாறை காஞ்சிரங்குடா பகுதி மற்றும் அக்கரைப்பற்று வட்டமடு முதல் பொத்துவில் வரையான காட்டுப்பிரசேங்கள் ஆகியவற்றின் மேலாக சுமார் இரண்டு மணிநேரத்துக்கு மேலாக வட்டமிட்டு வேவு பார்த்த இந்த உளவு விமானம் காலிப் பகுதியை நோக்கி திரும்பிச்சென்றதாக நேரில் பார்த்த புலிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று புதன்கிழமை காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை உளவு விமானம் இவ்வாறு பறந்து சென்றுள்ளதாக அம்பாறை மாவட்ட கண்காணிப்புக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ள புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா, அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான உளவு விமானம் பறந்தது இதுதான் முதல்தடவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழர் கொழும்பு மாநகர முதல்வராகிறார்
Next post மட்டக்களப்பில் இந்தியர் கடத்தப்பட்டுள்ளார்.