மணப்பெண்கள் விரும்பும் நகாஸ் நகைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 23 Second

தங்கத்தின் மீது ஆசை இல்லாதவர்களை கூட ஒரு முறை தங்க நகைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கும் விதம் பார்த்தாலே போதும்… அவர்களும் அதன் மேல் ஈர்க்கப்படுவார்கள். அதனால்தான் அதன் மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதேசமயம் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தங்க நகைகள் மேல் உள்ள காதல் என்றுமே நிலையாய் இருந்து கொண்டேதான் இருக்கிறது. எந்த நிலையில் இருப்பவர்களும் ஒரு சின்ன குண்டுமணி தங்கமாவது அவர்கள் சேமிப்பில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட தங்க நகைகளை அழகான வடிவமைப்புடன் வழங்கி வருகிறார்கள் சென்னை தி.நகரில் உள்ள சலானி நகை நிறுவனத்தினர்.

கோவையில் இம்மாதம் 17ம் தேதி வரை இவர்களின் வைரம் மற்றும் தங்க நகைகளுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதே சமயம் சென்னை மக்களையும் மகிழ்விக்க சென்னை தாம்பரத்தில் உள்ள சிவசக்தி மண்டபத்தில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1, 2 தேதிகளில் கண்காட்சியினை நடத்த உள்ளனர். கண்காட்சியில் இடம் பெற இருக்கும் இவர்களின் தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகள் குறித்த கண்ணோட்டம்…

தங்கம், வெள்ளி மற்றும் வைரம் எந்த நகைகளாக இருந்தாலும், அதனை முக்கிய நிகழ்வுக்கு மட்டுமில்லாமல் அலுவலகம் அணிந்து செல்வதற்காகவும் ஃபேன்சி டிசைன்களில் உள்ளன. அந்தந்த நிகழ்விற்கு ஏற்ப நகைகள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தாலும் அனைவரின் கவனத்தை ஈர்க்க இருப்பது நகாஸ் வேலைப்பாடு கொண்ட நகைகள்தான். இவர்களின் தங்கத்தில் உள்ள அனைத்து ஹெவி ஜுவல்லரிகளும் நகாஸ் முறையில் வடிவமைக்கப்பட்டது. தங்க நகைகளில் ஆன்டிக் மற்றும் ஃபேன்சி டிசைன்கள் என இரண்டாக பிரிக்கலாம்.

பெரும்பாலான ஆன்டிக் நகைகள் கோயில் சிற்பங்களை தான் மாடலாக எடுத்திருப்பார்கள். அந்த சிற்பங்களில் உள்ள மயில், அன்னம், கிளி போன்றவை மட்டுமில்லாமல் சிற்பங்களையும் வைரம், கெம்ப், ரூபி, எமரால்ட் போன்ற கற்கள் கொண்டும் டிசைன் செய்வது இவர்களின் சிறப்பம்சம். இதனைத் ெதாடர்ந்து ஆன்டிக் நகைகளில் பயன்படுத்தப்படும் மற்றொரு கற்கள் என்கட் வைரங்கள் என்று அழைக்கப்படும் போல்கி வைரங்கள்.

இது மட்டுமில்லாமல் நவரத்தினங்களையும் நகாஸ் வடிவங்களில் பயன்படுத்தலாம். நகாஸ் வடிவம் என்பது முழுக்க முழுக்க கைகளால் செதுக்கப்படுவது. இதனை ஆசாரிகள் தங்களின் கைகளால் மிகவும் நுணுக்கமாக செதுக்குவார்கள். டிசைன் தேர்வு செய்த பிறகு அதற்கான பிளாஸ்டிக் மோல்ட் ரெடி செய்து, அதில் உருக்கிய தங்கத்தை சேர்த்து, மோல்ட் எடுத்தபிறகு, ஆசாரிகள் தங்களின் வித்தைகளை அழகாக செதுக்குவார்கள். சலானியில் பெரும்பாலும் வடிவமைப்புக்கு சிறப்பம்சம் என்பதால், பிரைடல் நகைகள் மட்டுமில்லாமல் அனைத்து விதமான நகைகளுக்கும் முக்கியத்துவம் தருகிறார்கள்.

இவர்களின் அடுத்த கலெக்‌ஷன் நவரத்தினங்களின் ராஜாவான வைர நகைகள். சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் வைரக் கற்கள் பட்டை தீட்டிய பிறகுதான் முழுமையான வடிவத்தை அடைகிறது. தங்க நகைகள் போலவே இப்போது வைரத்திலும் மூக்குத்தியில் ஆரம்பித்து, நெக்லஸ், கம்மல், வளையல், ஒட்டியாணம், ஜடை பில்லை வரை நாம் விரும்பும் அணிகலன்களை அணிந்து மகிழலாம். வைரங்கள் அணிந்தால் தோஷம் என்ற நிலை மாறி, ஒரு வைர நகையாவது தங்களிடம் இருக்க வேண்டும் என்று இன்றைய பெண்கள் விரும்புகிறார்கள்.

வைரத்திற்குள் ஒளி ஊடுருவி செல்வதால்தான் அது நம் கண்களை பறிக்கும் அளவிற்கு ஜொலிக்கிறது. ஒரு இருட்டான அறைக்குள் வைரத்தின் கீழ் உள்ள கூர்மையான பகுதியில் டார்ச் அடித்தால் அது ஒரு அழகான பூப் போன்ற வடிவத்தில் பிரதிபலிக்கும். அவ்வாறு பிரதிபலித்தால், அது சரியான முறையில் பட்டை தீட்டப்பட்ட வைரம் என்று அர்த்தம். மேலும் வைரம் அணிந்தால் தோஷம் என்ற நிலை மாறி எல்லாரும் அதனை பயன்படுத்தும் வகையில் இன்டஸ்ட்ரியல் வைரங்கள் வந்துள்ளன. இவை நகைகளுக்காகவே பட்டைத் தீட்டப்படும் வைரங்கள்.

தங்கத்தினை 916 ஹால்மார்க் என்று குறிப்பிடுவது போல் வைரத்தின் தரத்தினை 4C (கலர், கட், கேரட், கிளாரிட்டி) அளவீடுகளால் நிர்ணயிக்கலாம். வைரத்தினை நகையாக அணிய ஆரம்பித்த பிறகு தான் மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதனை டிசைன் செய்து கொண்டு அணிகிறார்கள். வைரம் அணிவதால் நமக்குள் ஒரு பாசிடிவ் வைப்ரேஷன் ஏற்படும்.

பொதுவாகவே வெள்ளி என்றால் குத்துவிளக்கு, கலசம், கொலுசு என்று தான் நினைவிற்கு வரும். தற்போது வெள்ளியிலும் ஆபரணங்கள் உள்ளன. தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகள் பார்ப்பதற்கு அப்படியே தங்க நகைகள் போல் தோற்றமளிக்கும். இதிலும் அலுவலகம் முதல் திருமணம் வரை எல்லா விசேஷங்களுக்கும் ஏற்ப டிசைன்கள் உள்ளன. தங்க நகைகள் போல் வெள்ளி நகையினையும் நகாஸ் வடிவில் ஆசாரிகள் மூலமே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. தங்கம் விற்கும் விலையில் லட்சங்கள் செலவு செய்து வாங்க முடியாதவர்களுக்கு, அதேபோல் இருக்கும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகள் ஒரு வரப்பிரசாதம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post என் பேச்சால்தான் மக்களை கவர்ந்தேன்! (மகளிர் பக்கம்)
Next post மஞ்சள் முகமே வருக!! (மருத்துவம்)