மேல்மாகாணசபைத் தேர்தல், கம்பஹா, களுத்துறையில் ஆளும் கூட்டணி வெற்றி, கொழும்பில் எதிர்க்கட்சி வெற்றி!

Read Time:1 Minute, 54 Second

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல்மாகாணசபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தின் அதிகாரத்தினை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தன்வசமாக்கியுள்ளது. இந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6லட்சத்து 24ஆயிரத்து 530வாக்குகளைப் பெற்றதன் மூலம் 27ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது, ஐக்கிய தேசியக் கட்சி கம்பஹாவில் 2லட்சத்து 36ஆயிரத்து 256வாக்குகளைப் பெற்று 10ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஜே.வி.பியானது 21ஆயிரத்து 491வாக்குகளைப் பெற்று 01ஆசனத்தையும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசானது 18ஆயிரத்து 14வாக்குகளைப் பெற்று 01ஆசனத்தையும் பெற்றுள்ளது. இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் அதிகாரத்தினையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே தன்வசமாக்கியுள்ளது. இந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3லட்சத்து 51ஆயிரத்து 215வாக்குகளைப் பெற்றதன் மூலம் 14ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது, ஐக்கிய தேசியக் கட்சி களுத்துறையில் 1லட்சத்து 24ஆயிரத்து 426வாக்குகளைப் பெற்று 5ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஜே.வி.பியானது 13ஆயிரத்து 106வாக்குகளைப் பெற்று 01ஆசனத்தைப் பெற்றுள்ளது. இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியே வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கப்பம் பெறவேண்டிய தேவை எமக்கில்லை; தமக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் கண்டியில் கப்பம் பெறுவோரை உடன் கைது செய்யவும் -கருணாஅம்மான்
Next post எதிர்கட்சி தலைவருடன் பகிரங்க விவாதம் நடத்த ஜனாதிபதி இணக்கம்