கப்பலுடன் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் இலங்கையர்கள் என அறிவிக்கப்பட்ட போதிலும் உறுதிப்படுத்தப்படவில்லை-இந்தோனேசிய அதிகாரிகள்
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என இந்தோனேஷிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய கப்பலில் தஞ்சமடைந்துள்ள நபர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தோனேஷிய கடற்பரப்பில் தங்கியுள்ள குறித்த சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் கப்பலில் தங்கியுள்ள நபர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த காலப்பகுதிக்குள் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அல்லது இந்தப் பிரச்சினையை அவுஸ்திரேலியா தீர்த்துக்கொள்ள வேண்டும் எவும் குறிப்பிட்டுள்ளனர். அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் குறித்த நபர்கள் இலங்கையர்கள் என அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டால் அந்நாட்டுடன் பேச்சுவாhத்தை நடத்தி பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்க்க முடியும் என இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் டெக்கு பெய்சய்யா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த கப்பலில் தங்கியிருக்கும் சில சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் இந்தோனேஷியாவில் சில வருடங்கள் கழித்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார். குறித்த சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் தொடர்பில் சுமூகமான தீர்வினை எட்ட இந்தோனேஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
Average Rating