சீனாவின் கடும் பனிப்பொழிவு! கடல்கள் உறைபனியாக மாற்றம்! 1000 கப்பல்களின் பயணம் ஸ்தம்பிதம் (PHOTO)

Read Time:2 Minute, 17 Second


3 தசாப்தங்களுக்கு பிறகு சீனாவில் கடும் உறைபனி காலநிலை தற்போது நிலவி வருகின்றது. இதனால், கடல்நீர் பனியாக உறைந்து விட்டதால் சீனாவின் லயோனிங் மாகாணம், ஜினோஹு பகுதியில் உள்ள துறைமுகத்தில் 1000 கப்பல்கள் தமது பயணங்களை மேற்கொள்ளாமல் தரித்து நிற்கின்றன. சீனாவில் மைனஸ் 7.4 டிகிரியாக வெப்ப நிலை குறைந்து போனதால் அனைத்தும் உறைபனியாகி விட்டன. பெருங்கடலும்கூட உறைபனியாகிக் கிடக்கிறது.

இதனால் ஆயிரக்கணக்கான கப்பல்கள் ஐஸ் கட்டிகளுக்கு நடுவில் சிக்கியுள்ளன. சீனாவில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் மோசமான தட்பவெப்ப நிலையால் பேருந்து, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு சீனாவில் போகல் கடல் நீர் ஐஸ்கட்டியாகி விட்டது. கடல் முழுவதும் சுமார் 27 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு ஐஸ் கட்டிகளாகிக் கிடக்கிறது! அந்த கடலில் பயணித்த 1000 கப்பல்கள் ஐஸ் கட்டிக்குள் சிக்கி கிடக்கின்றன.

தென் சீனாவில் இரவில் பனிப்புயல் வீசுவதால் கடும் குளிர் நிலவுகிறது. சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாலுமிகள் பலர் கடும்குளிரில் அவதிப்படுவதனால் அவர்கள் மரக்குற்றிகளை தீமூட்டி அச்சூட்டில் குளிர்காய்வதாகவும், கடலில் உறைந்துள்ள பனிக்கட்டிகளால் கப்பல்களுக்கு சேதம் ஏற்படாதவகையில் மீட்புப்பணியில் பலர் ஈடுபட்டுள்ளதாகவும் சீனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் குத்திக் கொலை
Next post அடிக்கிற அடியில்.. தாரை, தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமோ???? -நையாண்டிப் புலவர்