எயிட்ஸுடன் பிறந்து பூரண குணம் பெற்ற குழந்தை: வைத்தியர்கள் சாதனை

Read Time:1 Minute, 33 Second

ANI.Winஅமெரிக்காவில் எயிட்ஸ் நோயிலிருந்து இரண்டு வயது குழந்தை ஒன்று பூரண குணமடைந்துள்ளது. அக்குழந்தைக்கு எயிட்ஸ் நோய் (எச்.ஐ.வி.) தாக்கி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அக்குழந்தையை ஜாக்சனில் உள்ள மிஸ்சிசிப்பி பல்கலைக்கழக மெடிக்கல் சென்டருக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அக்குழந்தைக்கு எயிட்ஸ் நிபுணர் டாக்டர்கள் ஹன்னா கே பிறந்த 30 மணி நேரத்தில் இருந்தே மருந்து மூலம் சிகிச்சை அளித்தார். தொடர்ந்து அக்குழந்தைக்கு பல மருந்துகளை கலந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அக்குழந்தை எயிட்ஸ் நோய் தாக்குதலில் இருந்து பூரண குணமடைந்தது. அதை தொடர்ந்து இதே சிகிச்சையை எயிட்ஸ் பாதித்த மற்ற குழந்தைகளுக்கும் பயன்படுத்த டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டு திமோதி ரே பிரவுன் என்பவர் எயிட்ஸ் நோய் முற்றிலும் குணமடைந்த நபராக அறிவிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து 2-வதாக இந்த பெண் குழந்தை முழுமையாக குணமடைந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
Next post ஜனாதிபதியை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தீக்குளித்தவர் மரணம்!