தற்கொலைதாரி அடையாளம் காணப்பட்டார்!
Read Time:1 Minute, 23 Second
இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன். அவரது கைத் தொலைபேசியின் சிம் காட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்கொலை தாரியான பெண் வவுனியா ப+வரசங்குளம் வாசியான அனோஜா குகனேந்தி சுகந்திராசா என்ற 21 வயதுடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். மேற்படி பெண் தற்கொலைதாரி பெண் தொலைபேசி மூலம் வழிநடாத்தப்பட்டுள்ளார் என்றும், சம்பவம் நடைபெற்போதும் யாருடனோ தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்ததாகவும் இராணுவ தளபதியின் வாகனத்தினை கண்டதும் தீடிர் என்று பாய்ந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையே மேற்படி தற்கொலைதாரி தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் டாம் வீதியைச் சேர்ந்த லொட்ஜ் உரிமையாளரும் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
– www.neruppu.com
Average Rating