முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன்: சீமானின் கண்டனம்

Read Time:2 Minute, 26 Second

seeman-piraba‘த ஹிந்து’ செய்திதாளுக்கு வடமாகாண சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்களை நாம் தமிழர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான், கண்டித்துள்ளார்.

இலங்கையில் கணவன் மனைவிக்கும் இடையில் உள்;ள பிரச்சினையில் அயல்வீட்டுக்காரர் தலையிடுவது போன்று தமிழகத்தின் கட்சிகள் பிரிவினைக் கொள்கையை முன்வைக்கக் கூடாது என்று விக்னேஸ்வரன் கூறியதாக தெ ஹிந்து செய்திதாள் குறிப்பிட்டிருந்தது

எனினும் இது தொடர்பில் கருத்துரைத்துள்ள சீமான், தனித் தமிழீழமே தீர்வு என்று தமிழக கட்சிகள் முதலில் கூறவில்லை. தமிழ் தலைவரான எஸ் ஜே வி செல்வநாயகமே அதனை முன்வைத்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்

அத்துடன், தமிழக அரசியல்கட்சிகள் அயல்வீட்டுக்காரர் என்றால் இந்திய மத்திய அரசாங்கம் என்ற உறவுமுறை என்றும் விக்னேஸ்வரன் பதில் வழங்கவேண்டும் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்

தமிழ்நாட்டு மக்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் வழங்கிய அழுத்தங்கள் காரணமாகவே விக்னேஸ்வரன் போட்டியிடும் மாகாணசபை தேர்தல் நடத்தப்படுகிறது என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்

இந்நிலையில் இதற்கு பதில் வழங்கும் வகையில் நேற்று யாழ்ப்பாணத்தில் வடமாகாண சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி வி விக்னேஸ்வரன், கருத்துக்களை வெளியிட்டார்

அதில் தமது கருத்துக்களை செய்திதாள் உண்மைக்கு புறம்பான முறையில் வெளியிட்டதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபசார குற்றச்சாட்டு: நடிகை கைது பாலியல் நோய் குறித்த அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
Next post இலங்கைக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் இந்தியா