திருச்சி சிறையில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 தமிழ் உணர்வாளர்கள் அடைப்பு..!

Read Time:1 Minute, 54 Second

முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவர் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டிய விவகாரத்தில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட உலக தமிழர் பேரவை அமைப்பினர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

உலக தமிழர் பேரவை அமைப்பினர் பழ.நெடுமாறன், அயனாவரம் முருகேசன், பொன்னிறைவன், பொன்.வைத்தியநாதன், உத்திராபதி, மாசிலாமணி, உதயகுமார், விடுதலை வேந்தன், பாஸ்கரன், பழ.ராஜேந்திரன், ராமதாஸ், குள,பால்ராஜ், அருண்.மாசிலாமணி உள்ளிட்ட 83 பேர் கைது செய்யப்பட்டு, கீழ வாசலில் உள்ள மக்கள் மன்றத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலைமிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் இவர்களை சிறையில் அடைக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.

மக்கள் மன்றத்தில் இருந்து 83 பேரையும் தூய வளவனார் பள்ளிக்கு மாற்றினர். மாஜிஸ்திரேட்டை தூயவள வனார் பள்ளிக்கு வரவழைத்து 83 பேரிடமும் கையெழுத்து வாங்கப்பட்டது.

இதையடுத்து 83 பேரையும் வரும் 27ஆம் தேதி வரை திருச்சி சிறையில் நீதிமன்றக்காவலில் வைக்க வேண்டும் என தஞ்சை குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார். இதன் பின்னர் 83 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலம் மக்ரேவின் கிளிநொச்சி பயணம், அனுராதபுரம் நகரை கடக்க முடியவில்லை!
Next post 72 வயதான பெண்ணின் வாயில் துணியைத் திணித்து துஷ்பிரயோகம்!