பரமி குலதுங்கவின் இறுதிக்கிரியைகள் நாளை!
Read Time:51 Second
பன்னிப்பிட்டியில் கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல் பரமி குலதுங்கவின் இறுதிக்கிரியைகள் நாளை புதன்கிழமை கொழும்பு பொரளை கனத்தை மயானத்தில் நடைபெறவுள்ளது. இத்தகவலை சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். களனி, வரகொடவில் உள்ள பரமி குலதுங்கவின் சகோதரின் வீட்டில் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரின் முழுமையான மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் நடைபெறும் என பிரசாத் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.