`பெனால்டி’ வாய்ப்பில் உக்ரைன் வெற்றி: 3-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது

Read Time:3 Minute, 25 Second

ukraine.flag.jpgஉலக கோப்பை கால்பந் தில் நேற்று நள்ளிரவு கோலோக்னியில் நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜி பிரிவில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து, `எச்’ பிரிவில் 2-வது இடம் பிடித்த உக்ரைன் அணிகள் மோதின. ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் உக்ரைன் அணிக்கு `ப்ரிகிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதை செவ்சென்கோ சரியாக பயன்படுத்தி கோல் அடிக்க தவறி விட்டார். அடுத்த மூன்று நிமிடங்களில் சுவிட்சர்லாந்தின் அலேக் சாண்டர் பிரெய் 25 மீட்டர் தூரத்தில் இருந்து பந்தை கோல் நோக்கி அடித்தார். ஆனால் இதை உக்ரைன் கோல் கீப்பர் தடுத்து விட் டார். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. இதனால் 2-வது பாதி யில் இரு அணி வீரர் களும் ஆவேசத்துடன் ஆடினார்கள். தங்களுக்கு கிடைத்த பல வாய்ப்புகளை இரு அணியும் கோல்களாக மாற்ற தவறினர். அதிலும் தற் போது தான் உலக கோப் பைகளில் அறிமுகமாகி உள்ள உக்ரைன் அணியின் ஆட்டம் சுவிட்சர்லாந்து வீரர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

எவ்வளவோ போராடியும் இரு அணிகளால் கடைசி வரை கோல் அடிக்க முடிய வில்லை. இதனால் 30 நிமி டங்கள் கூடுதலாக வழங்கப் பட்டது. இதி லும் கோல் ஏதும் அடிக்கப்பட வில்லை.

கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்காததால் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் பெனால்டிஷுட் முறை கடை பிடிக்கப்பட்டது.

இதில் உக்ரைன் அணி கேப்டன் செல்சென்கோ தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை கோலாக மாற்ற தவறினார். அடுத்த சுவிட் சர்லாந்துக்கு இரண்டு முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த இரண்டையும் அந்த அணி வீரர்கள் கோல் கம்பத்திற்கு மேலே அடித்து வீண் செய்தனர். அதன் பிறகு உக்ரைன் இரண்டு தடவை தொடர்ந்து கோல் அடித்தது. மூன்றாவது வாய்ப்பையும் சுவிட்சர்லாந்து கோட்டை விட்டது. இம்முறை அந்த அணி வீரர் அடித்த பந்தை கோல்கீப்பர் சோகோ விஸ்கி அருமையாக பாய்ந்து தடுத்தார்.

இதன் மூலம் உக்ரைன் 3-0 என்ற கணக்கில் சுவிட்சர் லாந்தை தோற்கடித்தது. உக்ரைன் அணியில் ஆடம் மிலஸ்கி, ரிபரோவ், குசோல் ஆகியோர் கோல் அடித்தனர். சுவிட்சர்லாந்து வீரர்கள் ஸ்டட்லர், பெர்னாட்டோ, கப்னாஸ் ஆகியோர் கோல் அடிக்கும் வாய்ப்புகளை தவற விட்டனர். இந்த வெற்றியின் மூலம் உக்ரைன் கால் இறுதிக்கு முன்னேறியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 4 ரஷிய பிணைக் கைதிகளையும் அல் காய்தா தீவிரவாதிகள் கொன்றனர்
Next post கால் இறுதியில் 30-ந்தேதி இத்தாலி-உக்ரைன் மோதல்