கால் இறுதியில் 30-ந்தேதி இத்தாலி-உக்ரைன் மோதல்
ஜெர்மனியில் நடைபெற்று வரும் 18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி யுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் ஜெர்மனி, ஈக் வடார், இங்கிலாந்து, சுவீ டன், அர்ஜென்டினா, ஆலந்து, போர்ச்சுக்கல், மெக் சிகோ, இத்தாலி, கானா, பிரேசில், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, பிரான்சு, ஸ்பெயின், உக்ரைன் ஆகிய 16 அணிகள் 2-வது சுற்றான நாக்அவுட்டிற்கு தகுதி பெற்றன. இதில் 2-வது சுற்றில் ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, போலந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த ஆட்டங்களில் இத்தாலி, ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கிலும், உக்ரைன் 3-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும் தோற்கடித்தன.
இத்தாலி-உக்ரைன் அணி கள் வருகிற 30-ந்தேதி கால் இறுதி போட்டியில் மோது கின்றன. இந்த ஆட்டம் ஹேம்பர்க் நகரில் நடக்கிறது. 2-வது சுற்று போட்டியில் இன்று கடைசி ஆட்டங்கள் நடைபெறுகிறது.
இதில் ஒரு ஆட்டத்தில் பிரேசில்-கானா அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் பிரான்சு -ஸ்பெ யின் மோதுகிறது. இதில் இருந்து இரு அணிகள் கால் இறுதிக்கு தேர்வாகும்.