துப்பாக்கிச்சுடு, வெட்டுக்காயங்களுடன் சடலம்
Read Time:1 Minute, 16 Second
திருகோணமலை அன்புவழிபுர பகுதியில் காந்திநகர் சுடுகாட்டு வீதியில் பாஸ்கரன் என்பவரின் சடலம் துப்பாக்கிச்சுட்டுக் காயங்களுடனும் வெட்டுக் காயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சடலமாக மீட்கப்பட்டவா அன்புவழிபுரம் கன்னியா வீதியைச் சேர்ந்தவராவார் எனத் தெரியவருகிறது.
இதேவேளை வவுனியா, கோவில்குளத்தில் இன்று மாலை (27-06-2006) 4.30 மணியளவில் புளொட் உறுப்பினரான தாஸ் என அழைக்கப்படும் கந்தசாமி மாணிக்கராசா (29;) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளின் துப்பாக்கிச் சு10ட்டில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் உமா மகேஸ்வரனின் சமாதி பிரதேசத்தை துப்பரவு செய்து கொண்டிருக்கையில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.