பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான வன்முறை: மராட்டியத்தில்தான் அதிக வழக்குப்பதிவு!!

Read Time:1 Minute, 46 Second

4b39f996-95bd-4845-8ad3-26886bb5b121_S_secvpfகடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான வன்முறையில் இந்தியாவிலேயே அதிக வழக்குகள் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பதிவு செய்யப்பட்டுவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துவுள்ளது.

இன்று மக்களவையில் பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி இத்தகவலை தெரிவித்தார்.

மகாராஷ்டிரா 13,837 வழக்குகளுடன் முதல் இடத்திலும், மத்திய பிரதேசம் 13,323 வழக்குகளுடன் 2-ம் இடத்தை பிடித்துவுள்ளது. ஆந்திர பிரதேசம் 13,267 வழக்குகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது. மேலும், பெண்களின் பாதுகாப்புக்கு இந்த அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக மேனகா காந்தி தெரிவித்தார்.

இதுபற்றி, மகாராஷ்டிராவை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறும்போது ‘‘சட்ட ஒழுங்கை அமல்படுத்துபவர்களும், காவல் துறையினரும் மிகவும் அலட்சியமாக செயல்படுகின்றனர். இந்தியாவிலேயே பெண்களுக்கென தனியாக காவல்நிலையம் இல்லாத ஒரே மாநிலம் மகாராஷ்டிரா மட்டும்தான். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கென தனியான குறை தீர்ப்பு மையங்களும் இல்லை’’ என்றும் தெரிவித்துவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் பற்றி மனம் திறந்த நடிகை!!
Next post பள்ளிக் கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்திய மகனை அடித்துக் கொன்ற கொடூர தந்தை தலைமறைவு!!