பல்கலைக்கழக மாணவிகளிடமும் பாலியல் தொல்லையா?: போலீசார் விசாரணை!!
Read Time:1 Minute, 4 Second
சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட பேராசிரியர் மதியழகன் பல்கலைகழகத்தில் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே இது சம்மந்தமாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படித்த மாணவி ஒருவர் திடீரென இங்கு படிப்பதை நிறுத்திவிட்டு வேறு பல்கலைகழகத்துக்கு சென்றுவிட்டார். அவருக்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
பேராசிரியர் மதியழகன் இதற்கு முன்பு காரைக்காலில் உள்ள பல்கலைகழக கிளையில் பணியாற்றி உள்ளார். அங்கு ஏதேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டாரா என்றும் விசாரணை நடைபெற உள்ளது.
Average Rating