மது விற்ற 7 பேர் ஊருக்குள் நுழைய 3 மாதம் தடை: திண்டுக்கல் கோர்ட்டு அதிரடி!!

Read Time:1 Minute, 43 Second

58aff7b9-d91e-4134-919b-bab0b69327d7_S_secvpfதிண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளத்தனமாக தொடர்ந்து மது பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இப்படி விற்பவர்களை பிடித்து அபராதம் போன்ற தண்டனை வழங்கினாலும் அவர்களில் பலர் திருந்துவது இல்லை. திருந்தாமல் தொடர்ந்து விற்பனை செய்தவர்களை போலீசார் பிடித்து திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இவர்களில் காமலாபுரத்தை சேர்ந்த சேவியர், வேடப்பட்டி ரமேஷ்பாபு, புதுசத்திரம் சரவணன், பழனியை சேர்ந்த சிலம்பரசன், திண்டுக்கல் மணிகண்டன், மணி, ஒட்டன்சத்திரம் முருகேசன் ஆகியோர் அவரவர் ஊருக்குள் 3 மாதம் நுழைய மாஜிஸ்திரேட்டுகள் தடை விதித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளத்தனமாக தொடர்ந்து மது பாட்டில்களை விற்பனை செய்த வத்தலகுண்டை சேர்ந்த சாந்தி, ஒட்டன்சத்திரம் செல்வராஜ், மதுரை கொண்டையன்செட்டி, சின்னாளபட்டி முத்து ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இம்மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து திருந்தி வாழும் மட்டப்பாறை ராமர், ஒட்டன்சத்திரம் தண்டபாணி, கள்ளிமந்தையம் பொன்னுச்சாமி, முருகேசன் உட்பட 13 பேரை ஆர்.டி.ஓ. கண்காணித்து வருகிறார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது!!
Next post பள்ளிக்கரணையில் ரூ. 53 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 4 பேர் இன்று கைது!!