பள்ளிக்கரணையில் ரூ. 53 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 4 பேர் இன்று கைது!!

Read Time:2 Minute, 2 Second

be87ef88-1d1e-4072-9630-603fd206f13d_S_secvpfபாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டு இங்கு புழக்கத்தில் விடப்படும் கள்ளநோட்டுகளால் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து வருகின்றது.

இந்த கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த சிலரை அவ்வப்போது போலீசார் கைது செய்து வந்தாலும் வட மாநிலங்களில் இருந்து கூலி தொழிலாளிகளாக தென் மாநிலங்களுக்கு வருபவர்களில் பலர் இதுபோன்ற கள்ளநோட்டுகளை மாற்றுவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.

இந்நிலையில், சென்னையின் புறநகர் பகுதியான பள்ளிக்கரணையில் தங்கியுள்ள ஒருவர் தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதற்காக இங்குள்ள ஒரு கடைக்கு சென்றார். அவர் தந்த 500 ரூபாய் நோட்டை உற்றுப்பார்த்த கடைக்காரர் அது கள்ளநோட்டாக இருக்கலாம் என சந்தேகித்தார். தனக்கு தெரிந்த ஒருவரிடம் அந்த நோட்டை தந்து சோதனை செய்தபோது அது கள்ளநோட்டுதான் என்பது உறுதியானது.
இதையடுத்து, கடைக்காரர் அளித்த புகாரின் அடிப்படையில் சலீம் ஷேக் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர் அளித்த தகவலையடுத்து ரோபன் அலி, ரஃபூல் ஷேக், மிது ஷேக் என மேலும் மூவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் கள்ளநோட்டு கும்பலின் தலைவன் சம்ஜத் ஷேக் என்பவனை தேடி வருகின்றனர்.

பிடிபட்ட நபர்களிடம் இருந்து ரூ.53,500 மதிப்பிலான கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மது விற்ற 7 பேர் ஊருக்குள் நுழைய 3 மாதம் தடை: திண்டுக்கல் கோர்ட்டு அதிரடி!!
Next post மடிப்பாக்கத்தை சேர்ந்த மாணவி மாயம்: போலீசார் விசாரணை!!