பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் தனக்கு தானே பிரசவம் பார்த்த எய்ட்ஸ் நோயாளி சாவு: ஆண் குழந்தையை கொன்ற கொடூரம்!!

Read Time:7 Minute, 57 Second

4c9697dc-24f5-4c79-8f22-02adbd5cc226_S_secvpfகோவை மாவட்டம் பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் கோவை செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் நேற்று காலை 11 மணிக்கு 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் முதலுதவி அளிக்கப்பட்ட பின், அவர் பிரசவ வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த பெண்ணை பரிசோதனை செய்ததில் அவருக்கு பிரசவமாகி இருப்பது தெரியவந்தது. ஆனால் குழந்தை எங்கே? என்ற விவரம் தெரியவில்லை. அந்த பெண்ணின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில், அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே பஸ் நிலையத்தில் அந்த பெண் கிடந்த இடத்தின் அருகே சுற்றுச்சுவரில் இருந்த ஒரு பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், வீரம்மாள் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த பிளாஸ்டிக் பையில் இறந்த நிலையில் ஆண் குழந்தை இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த குழந்தையின் உடல் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அந்த குழந்தை, காலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்த பெண்ணின் குழந்தை என்பது உறுதியானது.

அந்த பெண்ணுக்கு பொள்ளாச்சி பஸ் நிலையத்திலேயே திடீர் பிரசவம் நடந்து இருக்ககூடும். அதனால் ஏற்பட்ட ரத்தப்போக்கு காரணமாக அவர் மயங்கி கிடந்தார் என்று டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

இதனையடுத்து அந்த பெண் மற்றும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பெண் இறப்பதற்கு முன் தனது ஊரை திருப்பூர், ஈரோடு என்று மாற்றி மாற்றி கூறியதாக தெரிகிறது. இதனால் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை பிறக்கும் போதே இறந்ததா? அல்லது பிறந்த பின்னர் பிளாஸ்டிக் பைக்குள் அடைத்ததால் இறந்ததா? என்பது தெரியவில்லை. அதேபோல் அந்த குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பைக்குள் அடைத்தது யார்? என்பதும் தெரியவில்லை. அந்த பெண்ணே குழந்தையை பிளாஸ்டிக் பையில் அடைத்து கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

இது குறித்து போலீசார் கூறுகையில், இறந்த பெண்ணின் உறவினர்கள் யாராவாது வருகிறார்களா? என்று பார்ப்போம். இது குறித்து அந்த பகுதிகளில் துண்டு பிரசும் மற்றும் ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்துவோம். 3 நாட்களுக்கு பின்னர் யாரும் வரவில்லை என்றால் போலீஸ் தரப்புப்படி உடல் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்படும் என்றனர்.

பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட பிரசவித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்ததற்கான காரணங்கள் குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கண்ணன் கூறினார்.

இது பற்றி அவர் கூறியதாவது:–

பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் கிடந்த பெண்ணை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அந்த பெண் ஆபத்தான நிலையில் தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார்.

அவசர சிகிச்சை பிரிவில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக பிரசவ வார்டுக்கு மாற்றி, அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தோம். அப்போது அந்த பெண்ணை டாக்டர் பரிசோதனை செய்ததில், அவருக்கு சற்று நேரத்திற்கு முன்பு தான் குழந்தை பிறந்திருப்பது தெரியவந்தது. குழந்தை பிறந்தால் கர்ப்பப்பையில் உள்ள நஞ்சுக்கொடியை உடனடியாக அகற்ற வேண்டும். அப்போது தான் கர்ப்பப்பை சுருங்கி ரத்தப்போக்கு நிற்கும். ஆனால் அந்த பெண் கர்ப்பப்பையில் உள்ள நஞ்சுக்கொடியை எடுக்காமல் விட்டு விட்டார். இதனால் கர்ப்ப பையில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறியது. வழக்கமாக பிரசவத்திற்கு வருபவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்வது வழக்கம்.

அதேபோன்று அந்த பெண்ணின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில், அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரியவந்தது. இந்த பரிசோதனை அறிக்கை வரும் முன்பே அந்த பெண் இறந்து விட்டார். அவர் இறந்த பின்னர் தான் ரத்த பரிசோதனை அறிக்கை கிடைத்தது.

அதில் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது. எனவே பஸ் நிலையத்தில் அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் போது, பொது மக்கள் யார் மீதாவது ரத்தம் பட்டு இருந்தால் அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆஸ்பத்திரியில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தடுப்பு மாத்திரை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொன்னேரியில் 10–ம் வகுப்பு மாணவியின் கழுத்து–முகம் அறுப்பு: குடிபோதையில் வாலிபர் வெறிச்செயல்!!
Next post திருமண ஆசை வார்த்தை கூறி 10–ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: பட்டதாரி வாலிபர் கைது!!