என்ஜினியரிங் சீட் கிடைக்காததால் 9-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!!
மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் என்ஜினியரிங் சீட் கிடைக்காததால் விரக்தியடைந்த இளம்பெண் 9-வது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தானேவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆதித்தி போசல். காவல்துறை அதிகாரியான ஆதித்தியின் மகளுக்கு என்ஜினியரிங் சீட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மனவிரக்தியில் காணப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலைக்கு முயன்றார். ரத்தவெள்ளத்தில் கிடந்த இளம்பெண்ணை, பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்ஜினியரிங் சீட் கிடைக்காததால் இளம்பெண் ஒருவர் இச்சோக முடிவை தேடிக்கொண்டது அக்குடியிருப்புவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating