குற்றவாளியை பிடிக்கும் போலீசின் சொதப்பல் திட்டம்: இரண்டாவது முறையும் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்!!

Read Time:5 Minute, 42 Second

63243b5a-fa3a-4677-b402-b0d1ee6cdf44_S_secvpfகற்பழிப்பு காட்சியை வீடியோவாக படம் பிடித்து 17 வயது இளம்பெண்ணை மிரட்டிய குற்றவாளிகளை ‘வலை விரித்து’ பிடிக்க மராட்டிய மாநில போலீசார் தீட்டிய திட்டத்தால் அந்தப் பெண் மீண்டும் அவர்களிடம் சிக்கிச் சீரழிந்த சம்பவம் அழுவதா?, சிரிப்பதா? என்ற பரபரப்பு பட்டிமன்றத்தை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜல்னா நகரை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணும் அவரது நண்பரும் கடந்த ஏழாம் தேதி மாலை இங்குள்ள நவா சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது சுமார் 20 வயது மதிக்கத்தக்க இரு வாலிபர்கள் அவர்களை வழிமறித்தனர்.

உடன் வந்த நண்பரை சகட்டு மேனிக்கு தாக்கி அங்கிருந்து விரட்டிவிட்டு, அந்தப் பெண்ணை அருகாமையில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்றனர். கத்தி முனையில் மிரட்டி அவளை மாறி, மாறி கற்பழித்தனர். அந்த கொடூரக் காட்சியை அந்தப் பெண்ணின் செல்போனில் வீடியோவாக பதிவும் செய்தனர்.

அவர்களிடம் இருந்து விடுபட்டு வீட்டுக்குச் சென்ற அந்த இளம்பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறி அழுதார். அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதற்கிடையில், அந்தப் பெண்ணின் தாயார் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய அந்த நபர் உங்கள் மகளின் ஆபாசப்படத்துடன் அவரது செல்போன் எங்களிடம் உள்ளது. குடும்ப மானத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் உடனடியாக இரண்டாயிரம் ரூபாயை தந்துவிட்டு, அந்த காட்சிகளுடன் கூடிய செல்போனை வாங்கிச் செல்லலாம் என்று தெரிவித்தான்.

இந்த விபரத்தை அறிந்த போலீசார், குற்றவாளிகளை ‘வலை விரித்து’ பிடிக்க திட்டம் தீட்டினர். இதையடுத்து, தனது தாயிடம் பேசிய அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட அந்தப் பெண், ‘பணம் தயார், எங்கே வந்து சந்திக்க வேண்டும்’ என்று கேட்டார்.

ஜல்னா நகரில் உள்ள ஒரு மேம்பாலம் அருகே காத்திருப்பதாகவும், பணத்தை கொடுத்துவிட்டு செல்போனை வாங்கி கொள் என்றும் அவர்கள் கூறியதை ஒட்டுகேட்ட போலீசார், ‘நீ பயப்படாம முன்னாடி போம்மா.., பாலத்துல வெச்சு அவனுங்களை கோழிக்குஞ்சை அமுக்குறா மாதிரி, அமுக்கி தூக்கிட்டு வந்து லாடம் கட்டி, தோலை உரிச்சிடுவோம்’ என தைரியமூட்டினர்.

தனக்கு முழு போலீஸ் பாதுகாப்பு கிடைத்துவிட்ட துணிச்சலில் நடிகை விஜயசாந்தி பாணியில் நேற்று முன்தினம் மாலை தனது இருசக்கர வாகனத்தில் ஏறி அந்த மேம்பாலத்தை நோக்கி ஸ்டைலாக அந்த இளம்பெண் சென்று கொண்டிருந்தார்.

போகும் வழியிலேயே அதே இரு வாலிபர்கள் அவரை வழிமறித்து, அருகாமையில் இருக்கும் புதருக்குள் தூக்கிச் சென்று மீண்டும், மீண்டும்….,,

பாலத்தின் அருகே குற்றவாளிகளை பிடிக்க காத்திருந்து, காத்திருந்து களைத்துப்போன போலீசார், காவல் நிலையத்துக்கு திரும்பியபோது அவர்களைவிட சோர்ந்துப்போய் உடல் தளர்ந்த நிலையில் இரண்டாவது கற்பழிப்பு புகாருடன் அதே இளம்பெண் அங்கே காத்திருந்தார்.

இதையடுத்து, வீறு கொண்டு எழுந்த அந்த ‘போலீஸ் புலிகள்’ குற்றவாளிகள் இருவரையும் நேற்று கைது செய்து, அந்த பெண்ணிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போனையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் மிரட்டியபடி, அந்த செல்போனில் எந்த வீடியோவும் இல்லை என கூறப்படுகின்றது.

இந்த சம்பவங்கள் பற்றிய தகவல் ஊடகங்களில் வெளியானதையடுத்து அந்த போலீஸ் நிலையத்துக்கு விரைந்துவந்த மராட்டிய மாநில போலீஸ் ஐ.ஜி. விஷ்வாஸ் நக்ரே பட்டில், இந்த முட்டாள்தனமான திட்டத்தை தீட்டித்தந்த உதவி இன்ஸ்பெக்டர் வினோத் எஜாப்வர் என்பவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்தும், இவ்விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்ஜினியரிங் சீட் கிடைக்காததால் 9-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!!
Next post வைட்டமின் மாத்திரைக்குள் கொசு: பெண் பரபரப்பு புகார்!!