‘போட்டுத் தள்ளும்’ மனநிலையை வளர்ப்பது எது?..!! (கட்டுரை)

போராட்ட காலத்தில், குறிப்பாக போராட்ட சூழலுக்குள் வாழ்ந்த மக்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைவும் ஒருவர் மீதான மற்றவரின் நம்பிக்கையும் அபரிமிதமானது; மெச்சத்தக்கது. தமிழ்ச் சூழலில், அவ்வாறான நிலை அதற்கு முன்னர் இருந்திருக்கவும் இல்லை. எனினும், இறுதி...

தத்தளிக்கும் பிள்ளையை தத்தெடுக்க தயாராவோம்..!! (கட்டுரை)

“பணி செய் அதற்கு பெயர் தவம். தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக எண்ண வேண்டாம். அது தெய்வத்துக்குச் செய்யும் தொண்டு போன்றது” - சுவாமி விவேகானந்தர் குழந்தைகளை கடவுளின் பிள்ளைகள்...

விஜயதாச போய்விட்டார்; ஊழல் போய்விடுமா?..!! (கட்டுரை)

கடந்த வாரம், வடக்கிலும் தெற்கிலும் இரண்டு முக்கிய பதவி நீக்கங்கள் இடம்பெற்றன. தெற்கில், நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த 23ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டார்....

இருண்ட சூனியவெளிக்குள் அரசாங்கம்..!! (கட்டுரை)

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக பதவி வகித்து வந்த விஜயதாச ராஜபக்ஷ, கடந்த வாரம் பதவி விலகியிருக்கின்றார். அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்புகளை அவர் தொடர்ந்தும் மீறி வருகின்றார் என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, அவரை பதவி...

வன்னியிலும் வாகரையிலும் வாடும் மக்களுக்கு ஆதரவளிப்பது யார்?..!! (கட்டுரை)

மாவை சேனாதிராஜா தலைமையில், தமிழரசுக்கட்சியின் அணியொன்று கனடாவுக்குப் பயணமாகியுள்ளது. இந்த அணியில், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, வட மாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் கிழக்கு...

பிராயச்சித்தம்..!! (கட்டுரை)

கண்களைத் திறந்து கொண்டு குழிக்குள் விழுவதென்பது சில அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலையாகும். ‘குழி’ என்று தெரிந்து கொண்டே விழுந்து விட்டு, அதற்கான பழியை வேறொருவரின் தலையில் சுமத்தி விடுவதில், சில அரசியல்வாதிகள் விற்பன்னர்கள். குழிக்குள்...

தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வருமா? பரபரப்பான அரசியல் காட்சிகள்..!! (கட்டுரை)

திரைப்படத்தின் அந்த ‘க்ளைமாக்ஸ்’ காட்சி, தமிழக அரசியலில் அரங்கேறி விட்டது. சசிகலாவின் ஆதரவு பெற்ற 19 சட்டமன்ற உறுப்பினர்களை, ‘ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது’ என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்...

முஸ்லிம்களின் இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப காணி இல்லை..!! (கட்டுரை)

மரணித்த பிறகு, எல்லோருக்கும் அதிகபட்சம் ஆறடி நிலம்தான் சொந்தம். என்றிருந்தாலும், உலகத்தில் வாழ்கின்றபோது, தனிமனிதர்களும் குழுக்களும் அரசாங்கங்களும் நாடுகளும் நிலத்துக்காக நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. சர்வதேச அளவில் மண்ணுக்காக நடந்த யுத்தங்கள்தான் அதிகம். காணிப்...

பாரம்பரியங்களும் சட்டங்களும் எதிர்காலமும்..!! (கட்டுரை)

இந்திய வரலாற்றில் மாத்திரமல்ல, அண்மைக்கால உலக வரலாற்றிலும், மிக முக்கியமான தீர்ப்பொன்றை, இந்திய உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் வழங்கியிருக்கிறது. ‘முத்தலாக்’ என்று அழைக்கப்படுகின்ற விவாகரத்து முறை, இந்திய அரசமைப்புக்கு முரணானது எனவும், அந்நடைமுறையைத்...

சிக்கல்களுக்குள் சிக்கும் வடக்கு மாகாணசபை..!! (கட்டுரை)

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தலைமையிலான வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் வாரியம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. வடக்கு மாகாணசபையின் ஆயுள்காலம் இன்னமும், சுமார் ஒரு வருடம் வரையே இருக்கின்ற நிலையில், மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இந்த மாற்றம், பல்வேறு இழுபறிகளின் பின்னர்தான்...

தமிழர் அரசியலில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய யதார்த்தங்கள்..!! (கட்டுரை)

தமிழர் அரசியல் தளம், இன்றைய நிலையில் பல சுவாரஸ்ய களங்களைக் கொண்டதாக அமைந்து வருகின்றது. ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டதாகத் தமது நகர்வுகள் உள்ளதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் அரசியல் தலைமைகள், அதனூடாகத் தமிழ் மக்களுக்கு எழுந்துள்ள...

பெண்களின் வாழ்க்கை விடுகதையாகவே தொடருமா?..!! (கட்டுரை)

பெண்கள் மீதான வன்முறை, ஒடுக்குமுறைக்கு எதிராக கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட போராட்டங்களின் விளைவால், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் ஓரளவுக்குக் குறைந்ததாகத் தென்பட்டாலும், அது தொடர்கதையாகவே இருக்கின்றது. பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளினதும்...

ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணைக்குழுவும் திராவிட இயக்கங்களும்..!! (கட்டுரை)

“ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும்” என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் கோரிக்கை மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின்...

முதலமைச்சர் விக்கிக்கு வந்துள்ள சோதனை..!! (கட்டுரை)

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் ஒப்புதலைப் பெற்று விட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன், பெரியதொரு சிக்கலாக மாறியிருக்கிறார். மன்னார் மாவட்டத்தில் இருந்து டெலோ...

சம்பந்தன் ஏன் ரவியை பாதுகாக்க போனார்?..!! (கட்டுரை)

வெளிநாட்டு அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துவிட்டு, கடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக உரையாற்றினார். அப்போது, எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆற்றிய உரை, சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது....

இலங்கையில் பாலின சமத்துவம் என்பது எட்டாக்கனியாகுமா?..!! (கட்டுரை)

அதிகாரப் பரவலாக்கமில்லாத, மிகவும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் ஒரு சமுதாயத்திலேயே, நாம் வாழ்கின்றோம். இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கும் அதிகாரப் பரவலாக்கமில்லாத ஒரு சமுதாயத்துக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக, பாலின சமத்துவமின்மை காணப்படுகின்றது என்றால் அது மிகையாகாது. பாலின...

மஹிந்தவுடன் சேர்ந்தியங்க சம்பந்தன் ஆர்வமா?..!! (கட்டுரை)

நாட்டின் நலனுக்காகவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்காகவும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, செயற்படத் தயாராக இருப்பதாக, சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். ஜூலம்பிட்டியே மங்களதேரர் எழுதிய ஒரு நூல் வெளியீட்டில், கடந்த வாரம் கலந்து கொண்டு...

சீனா: இந்திய – ஜப்பான் அணு ஆயுத ஒப்பந்தம்..!! (கட்டுரை)

கடந்த ஆறு வருட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் ஒன்று, அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. உலக வரலாற்றில், முக்கியத்துவம் மிக்கதாக நோக்கப்படும் இந்த ஒப்பந்தம், இருதரப்பு பொருளாதார...

‘எமது கலாசாரத்தை மறக்காமல் இருக்க வேண்டும்’..!! (கட்டுரை)

கடந்த வாரம், சுவிற்சர்லாந்து அரச வா​னொலியான கனல்கா வானொலியில், சுவிற்சர்லாந்தின் Stadhalle Bulach - சூரிச் நகரில், 2017 செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும், “இலங்கை - ஆசிய...

பரபரப்புக்கு பஞ்சமில்லாத வடக்கு அரசியல்..!! (கட்டுரை)

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிப் போனது போல, வடக்கு மாகாணசபையின் அமைச்சரவை விவகாரமும் இப்போது, அதுபோன்றதொரு நிலைமைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறது. வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான, தமிழரசுக் கட்சியினரின் நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்துக்குப் பின்னர், அமைச்சரவையை...

அபிவிருத்தியை நோக்கி கட்டமைக்க வேண்டிய காலம்: வெற்றிடத்தை யார் நிரப்புவார்?..!! (கட்டுரை)

குழப்பமான சிந்தனையுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகமாகவே தமிழ்ச்சமூகம் இருந்து கொண்டிருக்கிறது. முன்வைக்கப்படுகிற குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களைப்பற்றி யாரும் சிந்திப்பதாயில்லை என்ற கவலை அநேகமானோரிடம் இருக்கிறது. இருந்த போதிலும், அதை நிவர்த்திப்பதற்கு முயற்சிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்....

சமுர்த்தி உதவி சாதாரண விடயமல்ல..!!! (கட்டுரை)

நாடு முழுவதிலும் சமுர்த்திப் பயனாளிகளை மீளாய்வு செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் புதிய பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதேவேளை, ஏற்கெனவே சமுர்த்தி உதவியைப் பெறுகின்றவர்களில் ஒரு தொகுதியினர் அந்த உதவியைத் தொடர்ந்தும்...

தமிழரசுக் கட்சியையும் விக்னேஸ்வரனையும் பிடித்திருக்கும் கோளாறு..!! (கட்டுரை)

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில்லை என்கிற முடிவுக்குத் தமிழரசுக் கட்சி வந்திருக்கின்றது. அதன் பிரகாரம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த மருத்துவர் ப.சத்தியலிங்கம், தன்னுடைய பதவியிலிருந்து...

அடக்குமுறையை நியாயப்படுத்திய போராட்டம்..!! (கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலும், அவர் அந்தப் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவதில்லை என்று சிங்கள மக்கள் மத்தியில், குறிப்பாகத் தெற்கிலுள்ள எதிர்க்கட்சிகள் மத்தியில், ஓர்...

காலக்கெடு; கெடுகாலம்; வெட்கக்கேடு..!! (கட்டுரை)

இலங்கையில் அரசியல்வாதிகள் காலக்கெடு வழங்குதல் என்பது சர்வசாதாரணமான விடயம் ஆகிவிட்டது. ஒரு பிரச்சினையிலிருந்து தப்புவதற்கு, வாக்குறுதி வழங்கியவருக்கான, ஒரு வகையான இடைக்கால நிவாரணம் என்று கூட இந்தக் காலக்கெடுக்களைக் கூறலாம். நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது...

மாகாண அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வியூகங்கள்..!! (கட்டுரை)

அதிகாரத்துக்கான போட்டி என்பது மிகவும் முக்கியமானது. அதிலும், அரசியல் அதிகாரம் மற்றும் அதன் வழிவந்த பதவிகள் மீதான வேட்கை, பல சூட்சுமங்களைக் கொண்டது. ஏனெனில், ஆட்சியதிகாரமும் பதவியும் ஒருவிதமான போதை. ‘அது’ இல்லாமல் பயணித்தால்,...

இராணுவத்தின் களமிறக்கம்; பொறுப்பற்ற தமிழ்த்தலைமை..!! (கட்டுரை)

இரண்டு பொலிஸார் மீது, கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு நடத்தப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணம் வந்திருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, “நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தேவைப்பட்டால் இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினரின் உதவியையும் பெறுவேன்” என்று கூறியிருந்தார்....

பூட்டான்: வளர்ச்சியா, மகிழ்ச்சியா?..!! (கட்டுரை)

[caption id="attachment_162572" align="alignleft" width="500"] Bhutan, Thimphu, Zilukha junior High school[/caption]மகிழ்ச்சியின் அளவுகோல் எது என்ற கேள்விக்கான விடை மிகவும் சிக்கலானது. மகிழ்ச்சி என்பது பண்பறி ரீதியானது. அதை அளவுகோல்களின் அடிப்படையில் அளவிடவியலாது....

‘நிலாவரை’ புதிர் அவிழ்ந்தது..!! (கட்டுரை)

குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள...

பொறுக்கிகளுக்கு போராளிகளின் சாயம் பூசப்படுகிறது: வாள்வெட்டு குண்டர் குழுக்களும் கதாநாயக பிம்பமும்..!! (கட்டுரை)

கடந்த ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர் குழுவொன்று, இரு பொலிஸாரை வாள்களினால் வெட்டியிருக்கின்றது. தாக்குதலுக்குள்ளான பொலிஸாரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து,...

‘மிக்காரும் இல்லை; தக்காரும் இல்லை’: பிரதமர் மோடியின் காய்நகர்த்தல்கள்..!! (கட்டுரை)

இந்திய பிரதமரின் 2019 நிகழ்ச்சித்திட்டம், ஏறக்குறைய இலக்கை எட்டி விட்டது. காங்கிரஸ் முன்னின்று உருவாக்கிய, கூட்டணியை பீஹாரில் உடைத்துச் சிதறடித்த நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கும் வலுவான எதிர்க்கட்சியோ,...

பெரிய பிரச்சினையாக இன்னமும் உள்ள மாணவர் இடைவிலகல்..!! (கட்டுரை)

பெருந்தோட்டப் பகுதிகளில், பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்களின் தொகை, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இது, கல்வியின் முக்கியத்துவத்தை உணராத ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு என்றும் கூறலாம். நான்கு புறங்களும் தேயிலை மலைகளால் சூழப்பட்ட பச்சையத்துக்குள்,...

கொக்கெய்ன் மயக்கங்கள்..!! (கட்டுரை)

கொழும்பு புறநகர் பகுதியில், பெருமளவிலான கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டமை, கடந்த சில நாட்களாக நாட்டின் அரசியல், சமூக அரங்கில் பேசுபொருளாகி இருக்கின்றது. ‘போதையற்ற இலங்கை’யை உருவாக்க வேண்டுமென்ற தொனிப்பொருளில், நாடு பயணித்துக் கொண்டிருக்கும் போது,...

நல்லூர் துப்பாக்கிச் சூடு; எது உண்மை?..!! (கட்டுரை)

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தென்மேற்கு மூலையில், கடந்த சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கைத் தமிழர்கள் வாழுகின்ற பல்வேறு நாடுகளிலும் கூட, இந்தச்...

எதைச் சாதிப்பார் ராம் நாத் கோவிந்த்?..!! (கட்டுரை)

இந்திய குடியரசுத் தலைவராக, ராம் நாத் கோவிந்த், நேற்று முன்தினம் பதவியேற்றிருக்கிறார். அவரது இந்தப் பதவியேற்பு, பல்வேறு விதமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. பதவியேற்பின் போது உரையாற்றிய அவர், முன்னாள் குடியரசுத் தலைவர்களான பிரணாப் முகர்ஜி,...

விஜயனுக்குமுன் இலங்கையில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்..!! (கட்டுரை)

இலங்கை, ஒரு பல்லினங்கள் வாழும், அவற்றின் பண்பாட்டை வலியுறுத்தும் ஒரு நாடாகும். பல்லினப் பண்பாட்டை வலியுறுத்தும் ஒவ்வொரு நாடும் தமது நாட்டுக்குள் வாழும் பல இனம், பல மொழி, பல மதம் சார்ந்த பண்பாட்டு...

அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் என்பது உண்மையா, மிரட்டலா?..!! (கட்டுரை)

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களில் 18 பேர், அரசாங்கத்தில் இருந்து பிரிந்து செல்ல இருப்பதாகக் கூட்டு எதிரணி எனப்படும் மஹிந்த...