பன்றிக்காய்ச்சலுக்கு உள்ளாகி நியுயோர்க்கில் இரண்டாவது நபரும் மரணம்!!
பன்றிக்காய்ச்சல் நோயால் நியுயோர்க் நகரில் இரண்டாவதாக ஒருவர் இறந்துள்ளார் 50வயதுகொண்ட பெண் ஒருவர் பன்றி காய்ச்சலால் இறந்துள்ளார். இதுதொடர்பாக சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிடுகையில் இப்பெண்ணின் மரணத்துடன் அமெரிக்காவில் பன்றிக்காய்ச்சல் நோயால் இறந்தவர்களின் தொகை...
ஐ.நா மனித உரிமைக்குழுவால் இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களும் விடுக்கப்படவில்லை -அமைச்சர் விஸ்வ வர்ணபால
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களும் விடுக்கப்படவில்லையென்று உயர்கல்வியமைச்சர் விஸ்வ வர்ணபால இன்று தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமை தொடர்பாக ஊடகமொன்றுக்கு...
நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்;புடன் சேவையாற்றிய படைவீரர்களை கௌரவிக்கும் பொருட்டு பிரதேச செயலகங்கள் தோறும் இராணுவ சேவைப்பிரிவு
நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்;புடன் சேவையாற்றிய படைவீரர்களை கௌரவிக்கும் பொருட்டு பிரதேச செயலகங்கள் தோறும் இராணுவ சேவைப்பிரிவு என்ற பிரிவை அமைத்து அதன்மூலம் படையினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் கலாநிதி சரத்...
வாழைச்சேனை ஓட்டமாவடியில் இருந்து வங்காள விரிகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களைக் காணவில்லை
மட்டக்களப்பு வாழைச்சேனை ஓட்டமாவடியில் இருந்து வங்காள விரிகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களைக் காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் கல்குடா பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த பதினாலாம் திகதி இயந்திரப் படகில்...
கொழும்பில் துப்பாக்கிச் சூடு இளம் தமிழ் வர்த்தகர் படுகாயம்..!
கொழும்பு புதுச்செட்டித் தெருவில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் தமிழ் இளம் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் சற்குணராஜா விமலன் (வயது 26) எனவும்...
ஆற்றில் ஒதுங்கிய ஆணின் சடலம் மீட்பு
அக்கரப்பத்தனை நியுபோர்ட்மோர் தோட்டம் கொத்மலை ஓயா ஆற்றில் கரை ஒதுங்கிய 50வயது மதிக்கதக்க ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டள்ளது. நேற்றுப்பகல் பிரதேச மக்களும் அக்கரைப்பத்தனை பொலிஸாரும் இதனை மீட்n;டடுத்துள்ளனர் அக்கரைப்பத்தனை உருளவள்ளித் தோட்டத்தைச்சேர்ந்த அருணாச்சலம் பரமசிவம்...
படையினரின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வு 3ஆம் திகதி..
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் படையினர் பெற்றுக்கொண்ட வெற்றியைக் கொண்டாடும் வகையிலான அரசாங்க வைபவமொன்று எதிர்வரும் 3ஆம் திகதி கொழும்பில் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த வைபவத்தை சுதந்திரதின வைபவத்திற்குச் சமமாக காலிமுகத்திடலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும்,...
விடுதலைப் புலிகளின் அறிவிப்பை நம்பமுடியாது: கோத்தபாய ராஜபக்ஷ
பயங்கரவாதத்தை கைவிடுவதாக விடுதலைப் புலிகள் அறிவிப்பதை நம்பமுடியாதென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக நீரோட்டத்தில் இணைவதற்கு அனுமதிக்குமாறு விடுதலைப் புலிகள் விடுத்த கோரிக்கையை நிராகரிப்பதாகவும் அவர் கூறினார். பல வருடகால வன்முறை...
அரசாங்கம் புதிய அரசியல் தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கும் -ஐ.தே.கட்சி தயாசிறி ஜெயசேகர
அரசாங்கம் புதிய அரசியல் தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்குமென அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....
பல தசாப்த காலங்களாக வன்முறைகளில் ஈடுபட்டு வந்த புலிகள் இயக்கத்துக்கு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பிரவேசிக்க முடியாது -கோத்தபாய ராஜபக்ச
ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் விடுத்த யோசனையை பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார். பி.பி.சிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே பாதுகாப்பமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார். பல...
மோதல்களின் போது புலிகள் தோற்கடிக்கப்பட்டமையானது சர்வதேச ரீதியிலான வெற்றியாகும் -அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
மோதல்களின்போது புலிகள் தோற்கடிக்கப்பட்டமையானது சர்வதேச ரீதியிலான வெற்றியாகுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை சர்வதேச நிதியத்திடமிருந்து கடன் கோரும்போது அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அதனை இணைந்து...
அகதி அந்தஸ்து வழங்கப்படாதோர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படவேண்டும்: சுவிஸ்
அகதி அந்தஸ்து வழங்கப்படாதவர்கள மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து செனட் சபை இன்று தீர்மானித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே பெருந் தொகையான இலங்கைத் தமிழ் அகதிகள் அடைக்கலம் புகுந்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்....
பிரபாகரன் கொலைக்கு பத்மநாதனே காரணம்: கருணா அம்மான்
விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் கே.பி. என அழைக்கப்படும் பத்மநாதன் சதி செய்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் கொலைசெய்திருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்....
புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஓடுபாதைகளில் விரைவில் விமானத்தளங்கள் அமைக்கப்படும்..
முல்லைத்தீவு மற்றம் இரணைமடுப்பகுதிகளில் விடுதலைப்புலிகளிடம் இருந்துகைப்பற்றப்பட்ட விமான ஓடுபாதைகள் தமது தேவைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் விமானப்படையினர் பயன்படுத்தவுள்ளனர் என விமானப்படைப்பேச்சாளர் விங்கொமாண்டர் ஜனக நாணயக்கார இத்தகவலை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவுக்கு சமீபமாக அமைந்துள்ள பெரிய விமான ஓடுபாதை...
பத்தாயிரம் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரிடம் சரண்.. தனி முகாம்களில் தடுத்து வைப்பு!!
இலங்கையில் தமிழர்களுக்குத் தனி தமிழ் ஈழம் நாட்டை உருவாக்க கடந்த 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடி வந்தனர். இந்தியா சீனா பாகிஸ்தான் நாடுகளிடம் நவீன ஆயுதங்களை பெற்றுக் கடும் போர்நடத்திய...
இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ விரும்பும் நாடுகள் ஐ.நாவின் சீ.ஆர்.ஏ.பி என்னும் அமைப்பினூடாக அத்தியாவசியப் பொருட்கள், கூடாரங்கள், என்பவற்றை வழங்க முன்வர வேண்டும் -ஐ.நா செயலர்
இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ விரும்பும் உதவி வழங்கும் நாடுகள் ஐ.நாவின் சீ.ஆர்.ஏ.பி என்னும் அமைப்பினூடாக அத்தியாவசியப் பொருட்கள், கூடாரங்கள், என்பவற்றை வழங்க முன்வர வேண்டுமென ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா...
மோதல்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்: கனடா
மோதல்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளையும், தொண்டு நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம், கனடிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் சர்வதேச அமைச்சர் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச மனிதாபிமான விழுமியங்களுக்கமைய,...
இந்தியா தர மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதக் கொள்வனவு: சரத் பொன்சேகா
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களின் போது ஆயுதங்களை வழங்க இந்தியா மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டியநிலை ஏற்பட்டதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “பாரிய விளைவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை இலங்கைக்கு...
முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை
விடுதலைப் புலிகளின் முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சாதாரண பிரஜைகள் போல வெளிக்கொணரப்படுவார்கள் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளால் பலவந்தமாக இணைக்கப்பட்ட பல சிறுவர் போராளிகள் குறித்து...
வவுனியா யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபை தேர்தல்..
வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அழைப்பு நாளை வர்த்தமானி மூலம் விடப்பட்டவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மகாணசபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விடுதலைப் புலிகளிடமிருந்து...
முகாமிற்குள் கைத்தொலைபேசி விற்பனை, வெளியில் எடுப்பதாக கூறி பணம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் 09பேர் கைது!!
வன்னியில் இடம்பெற்று வந்த கடும் மோதல்களின் காரணமாக தமது உயிர்களை மட்டும் காப்பாற்றிக் கொண்டு உடுத்த உடையுடன் இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா நலன்புரி நிலையங்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் இலட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பது தெரிந்ததே. இவ்வாறு...
பத்மநாதனைக் கைது செய்ய வேண்டும்: அரசாங்கம்
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதனைக் கைது செய்துமாறு சர்வதேசப் பொலிஸாரிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புக்கான ஆயுதக் கடத்தலை பத்மநாதன் மேற்கொண்டுவருவதாகவும் இலங்கை அரசாங்கம்...
பிரபாரகன் கொல்லப்பட்டு விட்டார்: பத்மநாதன் அறிக்கை
வன்னிப் பெரும் நிலப்பரப்பில் இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக விடுதலைப் புலிகளின் அனைத்துலக வெளியுறவுப் பேச்சாளர் எனக் கூறப்படும் செல்வராசா பத்மநாதன் அறிவித்துள்ளார். இராணுவத்தினருடன் நடந்த இறுதி...
131 கிலோ எடையுள்ள 15 குண்டுகள் வவுனியாவில் மீட்பு
131 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த 15 குண்டுகளை வவுனியா கந்தபுரம் காட்டுப் பகுதியிலி ருந்து பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். ஒவ்வொன்றும் ஒன்பது...
இராணுவத்தின் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு
இராணுவ முகாம்களிலிருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியில் சென்ற படைவீரர்கள் தொடர்ந்தும் வாவி ஓரங்களிலும், வயல் நிலங்களிலுமே உள்ளனர். இவர்கள் இன்னும் முகாம்களுக்குத் திரும்பவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா...
சரணடைய இடைத்தரகராக செயற்படுமாறு புலிகள் என்னை மன்றாட்டமாக கேட்டிருந்தனர் -லண்டன் ரைம்ஸ் பத்திரிகை நிருபர் மேரி கொல்வின் கூறுகிறார்..
சரணடைவதற்கு இடைத்தரகராக செயற்படுமாறு புலிகள் என்னிடம் மன்றாடிக் கேட்டனர். இது நம்பிக்கையிழந்த கடைசி தொலைபேசி அழைப்பாக இருந்தது. ஆனால், சில மணித்தியாலங்களுக்குள் மரணமடையப்போகின்ற மனிதனின் குரலோசையாக அது காணப்படவில்லை. புலிகளின் அரசியல் தலைவரான பா.நடேசன்...
மோதல் பகுதிகளில் பணியாற்றிய வைத்தியர்கள் விசாரணைக்கு உபடுத்தப்பட்டனர்..!!
இலங்கையின் வடகிழக்கே புதுமாத்தளன் பகுதியில் செயற்பட்ட தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றிய 3 மருத்துவர்கள் மீது இலங்கை சுகாதார அமைச்சு விசாரணைகளை நடத்திவருவதாக அமைச்சின் பேச்சாளர் தர்ம வன்னிநாயக்க தெரிவித்ததாக பிபிசி செய்தி தெரிவிக்கின்றது யுத்த...
பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தி இந்து சமுத்திரத்தில் எறியப்பட்டது .இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை இலங்கை பாதுகாப்புப் படையினர் தகனம் செய்து விட்டனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அவர்...
பத்மநாதன் எம்.பிக்கு அவரது பிறந்த ஊரில் மக்கள் அஞ்சலி.. தம்பிலுவிலில் இன்று இறுதிக்கிரியை
காலஞ்சென்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் கனகசபை பத்மநாதனின் பூதவுடல் நேற்று மக்கள் அஞ்சலிக்காக அவரது பிறந்த ஊரான காரைதீவில் வைக்கப்பட்டிருந்தது. அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பெரும்...
Prabhakaran got it all wrong in his last interview! -EXCLUSIVE
Slain LTTE leader Velupillai Prabhakaran's last interview was an exclusive with this newspaper, Lakbimanews, carried on December 28, 2008. We asked probably the hardest questions...
பிரபாகரன் கொல்லப்பட்டதை விடுதலைப் புலிகள் சார்பாகப் பேசவல்லர் உறுதிப்படுத்தியுள்ளார்..
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்புடைய சர்வதேச உறவுகள் பிரிவின் தலைவராக...
கிளிநொச்சி, முல்லைத்தீவில் புதிய இராணுவத் தளங்கள்..
விடுதலைப் புலிகளிடமிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வன்னிப் பிராந்தியத்தில் புதிய படைத் தலைமையகங்களை அமைப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களைத் தமது சொந்த இடங்களுக்கு அனுமதிப்பதற்கு முன்னர் அந்தப் பகுதிகளில் இரண்டு...
வன்னியில் நடந்தது என்ன?: நடந்தவற்றை விபரிக்கும் மக்கள்..
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு வலயத்தில் தாம் எதிர்கொண்ட துன்பங்களை மக்கள் தற்பொழுது வெளியிட ஆரம்பித்துள்ளனர். இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் மூலம் கிடைத்த...
வேலுப்பிள்ளை – பார்வதியின் கடைசி மகன் “பிரபா”வின் கசப்பான வரலாறுகள்..
வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியினருக்கு கடைசி மகனாக 1954.11.26 ஆண்டு வல்வெட்டிதுறையில் பிறந்தார். பிரபாகரன் என்ற இயற்பெயரை கொண்ட இவர் கரிகாலன், துரை, தம்பி என்ற வேறு பெயர்களாளும் அழைக்கப்பட்டார். இவருக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு...
பிரபாகரன் உண்மையிலேயே இறந்து விட்டார்; சனங்கள் சந்தேகப்பட்டதற்கு காரணம் என்னவென்றால், மக்கள் மத்தியில் பிரபாகரன் பற்றிய பெரிய “இமேஜ்”!! -அமைச்சர் கருணாஅம்மானுடன் ஓர் உரையாடல்..
புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டாரா? உயிருடன் இருக்கிறாரா? தப்பிச் சென்றுவிட்டாரா? கொல்லப்பட்டு விட்டதாக காண்பிக்கப்படும் சடலம் யாருடையது? இவை எல்லோரது மனதிலும் எழும் கேள்விகள். உண்மையிலேயே பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார். காண்பிக்கப்படுவது அவருடைய சடலம்...
“தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” என்பார்கள்.. அது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.. -புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன்
கேள்வி: உலகின் மிகக் கொடிய ஆயுத இயக்கமாக அறியப்படும் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் :விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக இராணுவ ரீதியில் அழிக்கப்பட்டு விட்டது....
கூட்டமைப்பினர் புதுடில்லி பயணம்
இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு மூலம் தீர்வு காணப்படவேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் புதுடில்லி செல்லவுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்...
மனிதநேயப் பணியாளர்கள் முகாம்களுக்குள் நுழைய தடையில்லை: விஜே நம்பியார்
இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவிசெய்வதற்காக உள்ளூர் பணியாகர்களை முகாம்களுக்குள் அனுப்பி மனிதநேயப் பணிகளை முன்னெடுப்பது பற்றி ஐ.நா. ஆராய்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் அலுவலக...
செட்டிகுளம் மெனிக்காம் முகாமில் மீண்டும் தமது பணிகளை ஆரம்பித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக்குழுவினர்..
வவுனியா செட்டிகுளம் மெனிக்காம் முகாமில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக்குழுவினர் மீண்டும் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர். இம்மாதம் இருபத்தோராம் திகதி மெனிக்பாம் முகாமிலுள்ள சில பகுதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கக்குழுவின் அதிகாரிகளில் சிலர் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று...