பொதுத் தேர்தல் களம்: முஸ்லிம் கட்சிகள் முகம்கொடுக்கவுள்ள சவால்கள்!! (கட்டுரை)

நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு, தமக்குத் தேவையில்லை என்று, ஆளுந்தரப்பு நிராகரித்துள்ள நிலையில், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள், பொதுத் தேர்தலொன்றைச் சந்திக்கும் நிலைவரமொன்று ஏற்பட்டுள்ளது....

மறக்கப்படும் தீர்வு !! (கட்டுரை)

ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியலில் சில விடயங்கள் முக்கியத்துவம் மிக்கவையாக இருக்கும். சமகால அரசியல் என்பது, அந்த விடயங்களைச் சுற்றியே கட்டமைக்கப்படும். அரசியல் வாதப்பிரதிவாதங்கள் எல்லாம், அது தொடர்பாகவே அமையும். அந்த விடயங்களே அரசியல்வாதிகளின் மூலதனமுமாகும்....

உண்மையில் திருத்த வேண்டியது!! (கட்டுரை)

இலங்கை முஸ்லிம்களுக்கு தொடர்ச்சியாகப் புதிய புதிய வடிவில் பிரச்சினைகளும் சவால்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. யார் ஆட்சிக்கு வந்தாலும், இதில் பெரிதாக மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை என்பதே நமது பட்டறியும் யதார்த்தமுமாக இருக்கின்றது. ‘இஸ்லாமியபோபியா’ மாதிரி,...

துறவறமும் திருமணமும்: பாப்பரசர் எதிர் பாப்பரசர் !! (கட்டுரை)

காலமாற்றத்துடன் மாற்றங்கள் நிகழ்வது இயற்கை. ஆனால், இம்மாற்றங்கள் நிச்சயம் நிகழும் என்பதற்கான உத்தரவாதம் எதுவுமில்லை. மாற்றங்கள் தேவைப்பட்டாலும், தவிர்க்க இயலாததாக இருப்பினும், அவை நிகழாமலும் இருந்திருக்கின்றன. இது மாற்றத்தை வேண்டிநிற்கும் விடயமும் அதுசார் அமைப்பும்...

தொடங்கும் தேர்தல் நாடகங்கள் !! ( கட்டுரை)

புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள் என்று நாம் பேசத் தொடங்கினாலும், யதார்த்தம் நம் முகங்களில் ஆழ அறையும் போது, அச்சமும் கோபமுமே மிஞ்சுகின்றன. இப்போது, எம் சமூகத்தின் பிரதான பேசுபொருள்களாக இருப்பவை, எவை என்பதை...

அரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் !! (கட்டுரை)

மாதிவெலயில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் அமைந்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து, கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சில இறுவட்டுகள் தான், இன்று நாட்டின் பிரதான பிரச்சினை என்று...

பகடிவதை எனும் பெருங் குற்றம் !! (கட்டுரை)

கடந்த சில நாள்களுக்கு முன்பாக, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையேயான கைகலப்பில், மூன்றாம் வருடத்தில் பயின்று கொண்டிருக்கும் மாணவர் ஒருவர், ஏனைய மாணவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தாக்குதலைக் அலைபேசியில் பதிவு செய்து ஒருவர்,...

ஈரானிய விமான விபத்தின் பாடங்கள் !! ( கட்டுரை)

ஈரானிய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரலும் ஈரானின் மிகச் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவருமான குவாசிம் சொலெய்மானி, அமெரிக்க ‘ட்ரோன்’ தாக்குதல் மூலம், கொல்லப்பட்டமைக்கு எதிர் நடவடிக்கையாக, ஈராக்கில் அமைந்திருந்த அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறி...

களையிழந்த ‘லோக்பால்’ பிரசாரம்? (கட்டுரை)

இந்தியத் தேர்தல்க் களத்தை நிர்ணயித்த ‘லோக்பால்’ அமைப்பு பற்றி, இப்போது யாருமே பெரிய அளவில் பேசாமல் இருப்பது, ஊழல் எதிர்ப்பாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு எதிரான, மிகப்பெரிய பிரசார...

’MCC ஒப்பந்தத்துக்கு ஒருபோதும் இடமில்லை’ !! (கட்டுரை)

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச தெரிவித்துள்ளார். கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போது, சஜித் இதனைக் கூறியுள்ளார். பெப்ரவரி 4...

‘ஈரான் பின்வாங்குகிறது’ !! (கட்டுரை)

ஈராக்கில், ஐக்கிய அமெரிக்கப் படைகள் மீது ஏவுகணைகளை ஈரான் நேற்று அதிகாலையில் ஏவியதன் பின்னர் ஈரான் பின்வாங்குவதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். மேற்படி தாக்குதல்களில் எந்த ஐக்கிய அமெரிக்கர்களும்...

நம்பிக்கையை நாசமாக்கும் அரசாங்கம் !! (கட்டுரை)

முன்னாள் அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரின் கைது நடவடிக்கைகளை அடுத்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட முறை, கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதைத் திசை திருப்பி...

இனி மரக்கறி சாப்பிடலாம் !! (கட்டுரை)

ஒரு கிலோகிராம் 300 முதல் 400 ரூபாய் வரையில் அதிகரித்திருந்த மரக்கறிகளின் விலை, தற்போது படிப்படியாகக் குறைவடைந்து வருகின்றது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள், இந்த மரக்கறிகளின் விலைகள் குறைவடையுமென்று, ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆராய்ச்சி...

ஒரு கொலை; ஒரு கதை: ஒரு முடிவின் தொடக்கம்!! (கட்டுரை)

சில செயல்கள் செய்யத்தகாதவை; அவ்வாறு செய்யத்தகாத செயல்களுக்குக் கொடுக்கும் விலை, இறுதியில் மிக அதிகமாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, அச்செயலை ஏன் செய்தோம் என்று, என்றென்றைக்கும் வருந்தும் வகையில், செய்த செயல்களுக்கான எதிர்விளைவுகள் அமைந்து...

தமிழர் அரசியலில் கருத்து உருவாக்கிகளின் வகிபாகம் !! (கட்டுரை)

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒருசில வாரங்களுக்கு முன்னர், தமிழ்ப் பரப்பில் தொடர்ச்சியாக எழுதி வரும் சிரேஷ்ட அரசியல் பத்தியாளர்கள் சிலர், யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி இருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தங்களுக்குள் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்...

உள்ளூராட்சித் தேர்தல்: மீண்டும் வீசும் தி.மு.க அலை !! (கட்டுரை)

தமிழகத்தின் அரசியல் களம், மீண்டும் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் மட்டுமே என்பதை, உள்ளூராட்சித் தேர்தல் நிரூபணம் செய்திருக்கிறது. டிசெம்பர் 27, 30 ஆகிய திகதிகளில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளில் இந்த நிரூபணம் வெளிப்பட்டுள்ளது. 91,975...

‘கோர்ட்’ போட்ட கோட்டாவின் சிங்கப்பாதை !! (கட்டுரை)

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், சமாதான காலப்பகுதியில், இராணுவ சீருடை இல்லாமல், சாதாரண உடையில் சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டது, அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட விடயமாகும். செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னரும்கூட, பல அரசியல் தலைவர்கள்,...

சித­றுமா தமிழ் வாக்­குகள் ? (கட்டுரை)

பொதுத்­தேர்­தலில் தமிழ் மக்­களின் வாக்­கு­களை மிகக் கவ­ன­மாகப் பயன்­ப­டுத்த வேண்டும் என்றும், அதி­க­பட்ச ஆச­னங்கள் தமிழ் பிர­தி­நி­தி­க­ளுக்கு கிடைப்­பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வலி­யு­றுத்­தப்­பட்­டாலும், அதற்குச் செயல்­வ­டிவம் கொடுக்கக் கூடி­ய­தொரு நிலை இன்று...

கத்தி மேல் நடக்கும் பயணம் !! (கட்டுரை)

சீனப் பயணத்துக்கான ஒழுங்குகள் முடிவு செய்யப்பட்ட சூழலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து, புதன்கிழமை (01) தொலைபேசி அழைப்பொன்று வந்தது. 2020 புத்தாண்டு தினமான அன்று, ஜனாதிபதி கோட்டாபய...

மதகுருமாரின் அரசியல் பிரவேசமும் ஆதிக்கமும் !! (கட்டுரை)

மத போதகர்களின் வாழ்க்கை என்பது, அர்ப்பணிப்புகள் நிறைந்தது. அதுவும், இல்லறமும் இன்னபிற இன்பங்களும் அற்ற துறவுநிலை, மிகவும் உன்னதமாகவே கருதப்படுகின்றது. அந்தவகையில், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மத போதகர்கள், துறவிகள் மதிப்புக்கும் மரியாதைக்கும்...

திசைவழிகளை திசைகாட்டல்!! (கட்டுரை)

இன்னோர் ஆண்டு, எதிர்பார்ப்புகளுடன் பிறந்திருக்கிறது. கடந்தாண்டு போலவே, இவ்வாண்டும் ஏராளமான பெரும் மாற்றங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. ஆனால், ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் தருவதற்காய் இவ்வாண்டு காத்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புதிய ஆண்டு புதிதாய்ப் பிறந்தாலும்,...

ராஜபக்‌ஷர்களைப் புதிய ஆண்டில் எதிர்கொள்தல் !! (கட்டுரை)

அனைவருக்கும் மற்றுமொரு தேர்தல் வருட வாழ்த்துகள். ஆம், இன்று பிறந்திருக்கும் 2020, பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப்போகின்றது. மக்களின் அத்தியாவசியத் தேவைகள், நாட்டின் சமாதானம், சௌபாக்யம்...

அபாண்டங்கள்!! (கட்டுரை)

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற வகையில், அரசியல்வாதிகளாலும் அதிகார ஆசை பிடித்த தரப்பினராலும், அரசியல்வாதிகளின் வெற்றிக்காகப் பாடுபடும் ஒட்டுண்ணிக் குழுக்களாலும் போலிக் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது வழக்கமானதே. ஆயினும், அதற்காக ஓர் இனத்தை, மதத்தை...

கிழக்கு ஆளுநரின் முன்னாலுள்ள சவால்கள் !! (கட்டுரை)

கிழக்கு மாகாணத்தில், பெரும்பான்மையாகத் தமிழ் மக்கள் வாழும் நிலையில், கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகத் தமிழர் ஒருவரை நியமிக்க, ஜனாதிபதி முன்வரவேண்டும்; இன ஐக்கியத்தின் வெளிப்பாடாக, சிறுபான்மை இனங்களுக்குத் தமது அரசாங்கத்தில் பங்குகளைக் கொடுத்து, அவர்களையும்...

ஜெனீவா விவ­கா­ரத்தில் அவ­ச­ரப்­ப­டாத அரசு!! (கட்டுரை)

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷவின் தலை­மை­யி­லான புதிய அர­சாங்­கத்­துக்கு, எதிர்வரும் புதன்­கி­ழமை பிறக்கப் போகின்ற, 2020ஆம் ஆண்டு சிக்­கல்­களுடன் தான் தொடங்கப் போகிறது. இந்த அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து தேர்தல் நடத்­து­வ­தற்கு முன்­ன­தா­கவே, ஐ.நா மனித...

ஈழத்தமிழருக்காக உலகிடம் கையேந்துவோரிடம் சில கேள்விகள் !! (கட்டுரை)

ஈழத் தமிழருக்கான விடிவு, சர்வதேசத்திடமும் இந்தியாவிடமும் இருக்கிறது என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை, நீண்ட காலமாக கட்டி எழுப்பப்பட்ட ஒன்று. இன்றும் இந்தியா ஈழத்தமிழர்களைக் கைவிடாது என்று சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். சர்வதேசம் இலங்கையை...

சிரிப்பதா சிந்திப்பதா? (கட்டுரை)

வரலாற்றில் பல உண்மைகளை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் வாகனத்தின் சாரதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை யாரையும் ஏறவேண்டாமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப்...

மனதை உறுத்தும் ஒரு சோகம் !! (கட்டுரை)

இறைவன் மனிதர்களுக்குக் கொடுத்துள்ள பல்வேறு அருட்கொடைகளில் எதையும் நன்றியுணர்வோடு மனிதன் நினைவு கூர்வது குறைவு என்பதை விட இல்லையென்றே கூறலாம். ஆனால், இயற்கையின் சீற்றம் வந்ததும் மனிதன் அப்போது தான் இறை சிந்தனையோடும் அவனை...

நாணயக் கயிற்றின் தேவை !! (கட்டுரை)

அதிகாரத்தரப்புடன் தேசிய இனமாகத் தன்னைப் பிரகடனப்படுத்தும் சிறுபான்மையினமொன்று, உரிமைகளைப் போராடிப் பெற வேண்டுமாக இருந்தால், அங்கு அடக்குமுறையொன்று பிரயோகிக்கப்படுவதாகவே கொள்ள வேண்டும். அந்தவகையில், தெற்காசிய நாடுகளில் மாத்திரமின்றி, பல்வேறு நாடுகளிலும், அடக்குமுறைக்கான கட்டமைப்புகள் காணப்படுகின்றமை,...

ஒற்றையடிப் பாதை !! (கட்டுரை)

சிறுபான்மைச் சமூகங்களுக்கான அரசியலைப் பொறுத்தமட்டில், மாற்றுத் தெரிவுகள் இல்லாமல், ஒற்றையடிப் பாதையில் பயணித்தல் என்பது, அவ்வளவு புத்திசாலித்தனமானதல்ல. திரும்பி வர முடியாத, எந்தப் புள்ளியிலிருந்தும் தமக்கு விருப்பமான இன்னுமொரு பாதைக்குத் திரும்ப முடியாத விதத்தில்...

கொலம்பியா: ஆயுதங்களை கைவிடுவதன் ஆபத்துகள்!! (கட்டுரை)

சமாதானத்துக்குக் கொடுக்கப்படும் விலை பெரியது. ஆனால், அவ்விலை யாருடைய சமாதானம், எதற்கான சமாதானம் என்பவற்றில் தங்கியுள்ளது. சில சமயங்களில், எதற்காகச் சமாதானம் எட்டப்பட்டதோ, அதன் தேவையும் நோக்கமும் கேள்விக்கு உள்ளாவதுண்டு. விடுதலைப் போராட்ட இயக்கங்கள்,...

ஈழத்தமிழர் பிரச்சினையில் வசமாகச் சிக்கிய அ.தி.மு.க !! (கட்டுரை)

குடியுரிமைச் சட்டமூலத்தை ஆதரித்த அ.தி.மு.கவுக்கும் எதிர்த்து வாக்களித்த தி.மு.கவுக்கும், கடும் போராட்டம் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. அ.தி.மு.க கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தனது ஒரு வாக்கையும் மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டமூலத்துக்கு...

ஒன்றுபட்டால் வென்று விடலாம்!! (கட்டுரை)

ஒரு சமூ­கத்தின் அபி­வி­ருத்­திக்கு பல்­வேறு கார­ணிகள் உந்­து­சக்­தி­யாக அமை­கின்­றன. இவற்றுள் அச்­ச­மூ­கத்­தி­ன­ரி­டையே காணப்­படும் ஒற்­று­மையும் முக்­கிய கார­ணி­யாக அமை­கின்­றது. சமூ­கத்தின் ஒற்­றுமை சீர்­கு­லையும் போது அபி­வி­ருத்தி தடைப்­ப­டு­வ­தோடு மேலும் பல பாதக விளை­வு­களும் ஏற்­படும்...

சுவரோவியங்கள் கூறும் கதை !! (கட்டுரை)

கோட்டாபய ராஜபக்‌ஷ, நவம்பர் 18 ஆம் திகதி, இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமானம் செய்யும் போது, தமிழ், முஸ்லிம் மக்களும் தமது வெற்றியில் பங்காளிகளாவர் எனத் தாம் நினைத்ததாகவும் ஆனால், அம்மக்கள் தமக்குப் போதியளவில்...

சேர்பியாவின் வெளிவிவகார பாதுகாப்புக் கட்டமைப்பு !! (கட்டுரை)

சேர்பியத் தலைநகர் பெல்கிரேட்டில், கடந்த 2014ஆம் ஆண்டில் நடந்த இராணுவ அணிவகுப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கலந்துகொண்டபோது, ரஷ்ய, பெலாரஸ், சேர்பிய படைகளால் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் “ஸ்லாவிக் சகோதரத்துவம்” - என்ற இராணுவப்...

தமிழ்த் தேசியக் கட்சிகள் ‘மீண்டும்’ ஒன்றிணைய வேண்டும் !! (கட்டுரை)

இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உருவாக்கம், மிக முக்கியமானதொரு மைல்கல்லாகும். 1971-1972இல், தமிழ் மக்களின் எந்தவொரு கருத்துகளும் உள்ளடக்கப்படாமலும் தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமலும், அதைவிடவும் இந்திய வம்சாவளி மக்களின்...

புதிய அரசமைப்பு: செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு? (கட்டுரை)

புதிய அரசமைப்புக்கான சாத்தியங்கள் இன்னமும் உள்ளதாகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அண்மையில் தெரிவித்திருந்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அதைச் செய்வார் என்றும் தெரிவித்திருந்தார். இந்த முத்துகளை, அந்த...

ஹைதராபாத் மோதல் கொலைகள்: எதைக் கொண்டாடுவது? (கட்டுரை)

கொலைகள் என்றும் கொண்டாடத் தக்கவை அல்ல; அது கொலைகாரனுக்கான தண்டனையாக இருந்தாலும், கொண்டாட முடியாதவை மட்டுமல்ல, கொண்டாடக் கூடாதாவை; ஆனால், கொலைகள் கொண்டாடப்படும் சமூகத்தில் நாம், வாழத் தலைப்பட்டுள்ளோம். இது, எம்மையும் நாம் வாழும்...

காலத்தின் கட்டாயம் !! (கட்டுரை)

தமிழ்த் தேசிய அரசியலில், போர் ஓய்வுக்குப் பின், தமிழர் உரிமை தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் பிரதேசம், மாகாணம், இனம் ரீதியாகப் புதிய அரசியல் கட்சிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்தாபிதங்கள், தமிழ் அரசியலிலும் சரி, தமிழ்...